ஸ்டிரைக்: நெருங்கும் பொங்கல் – நெருக்கடி கொடுக்கும் தொழிற்சங்கத்தினர்!
Will government buses run tomorrow
போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டாலும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 வது ஊதிய ஒப்பந்தம், ஓய்வூதியர்கள் அகவிலைப்படி உயர்வு, பணியில் உள்ள தொழிலாளர்கள் 4மாத நிலுவைத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஜனவரி 9ஆம் தேதி முதல் ஸ்டிரைக் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
இதுதொடர்பாக, அரசுடன் ஏற்கனவே இருமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
கடந்த 5 ஆம் தேதி பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ‘நிதி கூடுதலாக செலவாகும் சில கோரிக்கைகள் குறித்து நிதித்துறையுடன் கலந்தாலோசித்து முடிவு எட்டிய பிறகுதான் அறிவிக்க முடியும்’ என்று அமைச்சர் சிவசங்கர் தொழிலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று (ஜனவரி 8) தமிழக அரசின் நிதி நிலைமை மற்றும் ஊழியர்களின் கோரிக்கை குறித்து நிதித்துறை அதிகாரிகளுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனிடையே செய்தியாளர்கள் சந்திப்பில், ”போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தினாலும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும் என எதிர்பார்க்கிறோம். மக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்” என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
ஆனால் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்ட முடிவை திரும்ப பெறப்போவதில்லை என்று போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 3 மணியளவில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
TNGIM 2024 : “ஒரு வீடியோ பண்றதுக்கு ரூ.3 லட்சம் செலவாகும்” – வில்லேஜ் குக்கிங் சேனல் பேட்டி!
பில்கிஸ் பானு வழக்கு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
Will government buses run tomorrow