உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் இரண்டாவது நாள் அமர்வு சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று (ஜனவரி 8) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் கலந்துரையாடினர். village cooking channel
பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசியபோது, “கிராமத்துல ஒரு ஆறு பேர வச்சி ஸ்டார்ட் பண்ண சேனல், இன்னைக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுல கொண்டு வந்து நிப்பாட்டுனது ரொம்பவே சந்தோஷமா இருக்கு.
இந்த நேரத்துல தமிழ்நாடு அரசுக்கும், நம்ம சப்ஸ்கிரைபர்ஸ் எல்லோருக்கும் நன்றி தெரிவிச்சிக்கிறோம்.
பெருசா படிக்கல, எங்களோட அனுபவத்தை வச்சி தான் இந்த சமையலே பண்றோம். பெரிய, பெரிய இடங்களுக்கு சமையல் பண்ணிருக்கோம்.
அப்ப யாருமே நல்லா இருக்கு, நல்லா இல்லன்னு சொல்ல மாட்டங்க. ஆனால் இப்போ வீடியோ பார்க்க ஆரம்பிச்ச பிறகு, சமையல் நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்றாங்க.
ஆரம்ப நாட்கள்ள எக்ஸ்பரிமண்ட் பண்ணும்போது ரொம்பவே சொதப்பியிருக்கு. அரேபியன் பிரியாணி பண்றதுக்காக ஒரு குழிக்குள்ள இரண்டு ஆடுகளை மசாலா தடவிப் போட்டு, அதுமேல தகரத்தை வச்சு ஒரு மாட்டு வண்டி நிறைய விறகை கொட்டி தீமூட்டி 2 மணி நேரம் எரிய விட்டோம்.
நெருப்பு அணைஞ்ச பிறகு ஆடு இருந்த தடயம் மட்டும் தான் இருந்துச்சு. ஆட்டைக் காணல. நெருப்புல ஆடு பொசுங்கி சாம்பலாகியிருச்சு.
அதுல இருந்து கத்துக்கிட்டு, மறுபடியும் சமையல் பண்ணி வீடியோ போட்டோம். அது சக்சஸ் ஆகியிருச்சு. ஒவ்வொரு முறையும் தவறுகள் செய்யும் போது தான் அதுல இருந்து நிறைய கத்துக்க முடியும்.
ஒவ்வொரு வீடியோவும் நேர்மையா போடணும். நாங்க சமைக்கிறத மத்தவங்களுக்கும் கொடுக்குறதுக்காக நிறைய சமைப்போம்.
ஒவ்வொரு முறையும் சமையல் பண்ணும்போது 100 பேருக்கு சாப்பாடு போடுவோம். ஒரு வீடியோ பண்றதுக்கு ரூ.3 லட்சம் வரை செலவாகுது.
ஆரம்பத்துல ஊருல கிடைக்குற நண்டு, நத்தை, மீனை வச்சி சமையல் பண்ணோம், அதுல அவ்வளவா செலவு இல்ல.
இப்போ பெருசு, பெருசா சமையல் பண்றதால செலவு அதிகமாகுது. அதுக்கு ஏத்த மாதிரி மக்களோட சப்போர்ட்டும் நல்லாவே இருக்குது”, என்று தெரிவித்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பில்கிஸ் பானு வழக்கு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
சிவகாசி காலண்டர்கள் விற்பனை ரூ.350 கோடி: மக்களவைத் தேர்தலால் 10% உயர்வு!
village cooking channel