புத்தம் புதியது என்று ஏதேனும் உள்ளதா? புத்தாண்டு வாழ்த்துக்கள்!

சிறப்புக் கட்டுரை தமிழகம்

தத்துவ ஞானி ஜே கிருஷ்ணமூர்த்தி 

வானிலை சற்று மோசமாகவே இருக்கிறது. நீங்கள் அதிகமாக நனைந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன். இந்த நாள் புதிய வருட தொடக்கமாக கருதப்படுகிறது.

“நியூ இயர்” என்றால் என்ன அர்த்தம் கொள்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை. முற்றிலும் புத்தம் புதிதான வருடம் என்று அர்த்தம் கொள்கிறீர்களா? அதாவது, இதற்கு முன்பு நடந்திராத புத்தம் புதியது.

நாம் புதியது என்று சொன்னாலும், சூரியனை கூரையாகக் கொண்ட இவ்வுலகில் எதுவுமே புதியது இல்லை என்பது நமக்கு தெரிந்ததே. ’ஹேப்பி நியூ இயர்’ (மகிழ்ச்சியான புத்தாண்டு) என்று சொல்லும் பொழுது உண்மையிலேயே நமக்கு புதியது தானா? அல்லது பழைய அதே வழிமுறைகளை மீண்டும் மீண்டும் தொடர்ந்துகொண்டே இருக்கிறோமா?

பழைய அதே சடங்குகள், பழைய அதே மரபுகள், பழைய அதே பழக்க வழக்கங்கள், நாம் செய்து கொண்டிருப்பவையின் அதே தொடர்ச்சி. வரப்போகும் வருடமும் இதைத்தான் செய்யப் போகிறோம், அல்லவா?

இதற்கு முன்பு, நீங்கள் ஒருபோதும் கண்டிராத, புத்தம் புதியது என்று உண்மையில் ஏதாவது இருக்கிறதா? இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேள்வி. சொல்வதை புரிந்துகொண்டால் இதுவரை நாம் வாழ்ந்து வந்த வாழ்க்கையிலிருந்து, இதற்கு முன்பு ஒருபோதும் கண்டிராத, ஒன்றாக மாறுவதற்கான ஒரு கேள்வி.

அதாவது பழையதில் ஊறிப்போன நம் மனம், அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளுமா? அது தன் சுபாவத்திலிருந்து, முன் தீர்மானங்களிலிருந்து, அபிப்பிராயங்கள், முடிவுகள், உறுதியான நம்பிக்கைகளிலிருந்து விடுபடுமா? இவை அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி, உண்மையிலேயே புதிய வருடத்தை தொடங்குவோமா? இதை நாம் செய்தால் அதுவே மகத்தானது.

ஏனெனில் நம் வாழ்க்கை குறுகியதாக, மேம்போக்கானதாக அர்த்தமே இல்லாமல் இருக்கிறது. நாம் இங்கு பிறந்துவிட்டோம். அது நமக்கு பிடிக்கிறதோ இல்லையோ, நாம் பிறந்தோம், கல்வி கற்றோம்… ஒருவேளை கல்வியே இவற்றிற்கு தடையாக இருக்கிறதோ என்னவோ!

நம் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும் திசையை அப்படியே மாற்ற முடியுமா? இது சாத்தியமா? அல்லது, எப்போதும் குறை கூறிக்கொண்டே நம் வாழ்க்கையை இதேபோல குறுகியதாக அற்பமானதாக, அர்த்தமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறோமா?

எண்ணங்களின் கூட்டு சேர்க்கையால் உண்டானவற்றைப் பிடித்துக் கொண்டு நமது மனதை நாம் நிரப்புகிறோம். இது ஒரு பிரச்சாரம் அல்ல. இது ஒரு பிரசங்கம் அல்ல.

எல்லா சர்ச்சுகளில், கோவில்களில் என அனைவரும் புதிய வருடத்தை கொண்டாடுவதாக இருக்கலாம். ஆனாலும் பழையதே தொடரப்படுகிறது. பழைய சாங்கிய சம்பிரதாயங்கள், பூஜைகள், சந்தியா வந்தனம் என மற்றும் பல.

பழைய அனைத்தையும் விடுத்து… புதியதாக, சுத்தமான Slate – உடன் இந்த ஆண்டை தொடங்க முடியுமா? அதிலிருந்து நம் மனதிலும் இதயத்திலும் என்ன பிறக்கிறது என்று பார்ப்போம்.

(1 ஜனவரி 1985 அன்று சென்னையில் கேள்வி- பதில் நிகழ்ச்சியில்  தத்துவ ஞானி ஜே.கிருஷ்ணமூர்த்தி ஆற்றிய உரை)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தளபதி 68 படத்தின் டைட்டில் இதோ!

சாதி அடையாளத்துடன் விவசாயிகளுக்கு ED சம்மன்: கிருஷ்ணசாமி கண்டனம்!

+1
0
+1
1
+1
0
+1
9
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *