பொருளாதார வல்லுனர்களின் ஆய்வுகளும்… நோபல் பரிசும்! – பகுதி 3

இந்தியா சிறப்புக் கட்டுரை

நா.மணி

நாம் சந்திக்கும் பிரச்சினைகளை வங்கிகளைப் போன்று கட்டமைக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம்  தீர்க்க முடியும் என்பதை டக்ளஸ் டைமன்ட் மற்றும் பிலிப் டெப்விக் ஆய்வுகள் மூலம் விளக்கினர். 

இவர்கள் இருவரும் 1983 ஆம் ஆண்டு கோட்பாட்டு ரீதியான ஒரு ஆய்வு மாதிரியை உருவாக்கினர். இந்த மாதிரி வங்கிகள் எவ்வாறு தங்களுக்கு தேவைப்படும் பணத்தை (Liquidity) வைப்புத் தொகைகள் மூலம் உருவாக்கிக் கொள்கின்றன? அதேசமயம் கடன் கொடுப்பதற்கான நீண்ட கால நிதியை  எவ்வாறு உருவாக்குகிறது என்பதையும் விளக்கினர். 

இந்த மாதிரி ஒப்பீட்டளவில் மிகவும் எளிமையானதாக இருந்தபோதிலும் வங்கிகளின் செயல்பாட்டுக்கு மைய விசை எப்படி உருவாகிறது?. அதேசமயம் இந்த அமைப்பு எப்படி உள்ளார்ந்த பலவீனத்தை கொண்டுள்ளது?  அதனை சரி செய்வதற்கான நல்ல நெறிமுறைகள் ஏன் அவசியம் என்பதையும் விளக்குகிறது.

பணத்திற்கான தேவை

இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சி அதன் வழியாக உருவாக்கப்பட்ட மாதிரி,  குடும்பங்கள் எவ்வாறு வருவாயின்  ஒரு பகுதியை  சேமிக்கிறது.  தங்களுக்கு தேவைப்படும் போது ஒரு பகுதியை எடுத்துக் கொள்ள முடிகிறது என்பதன் அடிப்படையில் அமைந்தது.

பணத்திற்கான தேவை எப்போது எந்த நேரத்தில் உருவாகிறது என்று ஒவ்வொருவருக்கும் தெரியாது.  ஆனால் அனைவருக்கும் ஒரே நேரத்தில் அந்த தேவைகள் உருவாவதில்லை.  அதேசமயம் சில நீண்ட கால திட்டங்களுக்கு முதலீடுகள் தேவைப்படுகிறது.  தனது பணத் தேவை கருதி இந்த திட்டங்களை முன்கூட்டியே முறித்துக் கொண்டால் பெரும் வருவாய் குறைவு ஏற்படும்.

Economists' studies and Nobel Prize3

ஒரு பொருளாதார கட்டமைப்பில் வங்கிகளே இல்லையெனில் இந்தத் திட்டங்களில் நேரடியாக முதலீடு செய்ய வேண்டியது தான்.  திட்டங்கள் செயல்படும் நேரத்தில் பணம் தேவைப்பட்டால் நீண்ட கால திட்டங்களை முன்கூட்டியே நிறுத்த வேண்டியது தான். இதனால் குறைந்த லாபமே மிஞ்சும். அதேசமயம் தங்கள் முதலீட்டு திட்டங்களை நிறுத்த வேண்டிய தேவை இல்லாதவர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும்.  இதனால் அதிக அளவு நுகர்வு செலவுக்கு ஒதுக்க இயலும்.

அத்தகைய சூழ்நிலையில் குடும்பங்கள் வருமானத்திற்கு குறைவு இல்லாத தீர்வுகளை வேண்டுவார்கள். இந்தத் தீர்வுகள் மதிப்பு மிக்கவை.  மக்கள் நீண்ட கால குறைவான வருமானத்தையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பார்கள். இயல்பாகவே இத்தகைய தீர்வுக்கான கருவியாக ( இடைத்தரகராக)  வங்கிகள் செயல்படுகிறது என்பதை எடுத்துக் காட்டினர்.

வங்கிகள் சேமிப்புகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை  வழங்குகிறது.  வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை வைப்புத் தொகையாக வைத்துக் கொள்ளலாம்.  பின்னர் நீண்ட கால கடனாக திட்டங்களுக்கு வங்கிகளால் தரப்படுகிறது. வைப்புத் தொகை வைத்திருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் தங்கள் பணத்தை நஷ்டம் இன்றி திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

தங்களின் நேரடியான முதலீடுகளுக்கு பாதிப்பு இன்றி இதனை செய்து கொள்ள இயலும். இத்தகைய திட்டங்களால் நேரடி முதலீட்டை காட்டிலும் நீண்ட கால வருமானத்தை விட்டுக் கொடுக்கும் குடும்பங்களால் இந்த நிதி உருவாக்கப்படுகிறது.

வங்கிகள் எவ்வாறு பணத்தை உருவாக்குகிறது?

Economists studies and Nobel Prize3

வங்கிகளின் இத்தகைய செயல்கள் ரொக்கத்தை உருவாக்குகிறது. வங்கிகளில் உள்ள டெபாசிட்கள்  சேமிப்புகள் வங்கிகளுக்கு  ஒரு பொறுப்பு.  அதேசமயம் வங்கிகள் கொடுக்கும் நீண்ட கால கடன்கள் வங்கிகளின் சொத்துக்களை உள்ளடக்கியது.

வங்கிகளின் சொத்துத் துகள் நீண்ட காலத்தில் முதிர்வு அடையக் கூடியவை.  ஏனெனில் கடன் பெறுவோருக்கு கடனை முன்கூட்டியே திரும்பச் செலுத்த  வேண்டியதில்லை என்ற உத்திரவாதத்தை அளிக்கிறது.

அதேசமயம் வங்கிகளின் பொறுப்பாக இருக்கும் வாடிக்கையாளர் சேமிப்புகள் குறுகிய காலத்தில் முதிர்ச்சி அடையும் தன்மை கொண்டவை.  டெபாசிட் செய்தவர்கள் எப்போது திருப்பி பெற விரும்புகிறார்களோ அப்போது பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள முடியும். 

நீண்ட கால முதிர்வை அடிப்படையாகக் கொண்டுள்ள  சொத்துக்களின் குறுகிய கால முதிர்வுகளுக்கான  பணத்தை வழங்குகிறது. இதனை முதிர்வு மாற்றம் என்று அழைக்கின்றனர்.

வங்கியில் பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். தங்களின் நேரடியான செலுத்துதல்களுக்கு இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும். வங்கிகள் காற்றில் இருந்து பணத்தை உருவாக்குவதில்லை.

தனது நீண்ட கால முதலீட்டு திட்டங்கள் வழியாக பணத்தை உருவாக்குகிறது.  இதனையே சில நேரங்களில் வங்கிகள் பணத்தை உருவாக்குகின்றன என்ற விமர்சனமாக வருகிறது.

வதந்திகளால் வலிமை குறையும் வங்கிகள்

வங்கிகள் தரும் கடன்களோ சேமிப்புகளோ அதன் முதிர்ச்சியில்  மாற்றுவதே மதிப்புமிக்கது. சமூகத்திற்கு நல்லது.  ஆனால் இதற்கான வங்கியின் வணிக மாதிரி மிகவும் பலவீனமாக உள்ளதை நோபல் விருதாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகின்றனர். 

Economists' studies and Nobel Prize3

“ஒரு வங்கியில்  சேமித்து வைத்த அனைத்து  கணக்காளர்களும் பணத்தையும் திரும்ப  பெற போகின்றனர்” என்ற  வதந்தி பரவினால் போதும். அந்த தகவல் உண்மையா இல்லையா என்று தெரிந்து கொள்ளலாமலேயே பணத்தை திரும்பப் பெற அனைவரும் வங்கியை நோக்கி விரைவார்கள்.  

இதனால் வங்கியே  திவாலாகும். ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு வங்கியும் இப்படி ஓடி  அவையும் திவாலாகிவிடும் சூழ்நிலை உருவாகும்.  டெபாசிட் வைத்திருப்போர் அனைவருக்கும் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டிய நிலை வரும் போது வங்கிகள் தனது நீண்ட கால முதலீடுகளை பெற்றே இதனை சரிகட்டும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.  ஒரு வதந்தி ஒட்டுமொத்த வங்கிகள் தோல்வியை தழுவவும் நிலைகுலைந்து போக காரணமாகிறது.

வங்கிகளின் இந்த உள்ளார்ந்த பலவீனம் தான் 1930 களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார பெரு மந்தத்திற்கு காரணம் என பெர்ன் னான்க் சுட்டிக் காட்டுகிறார்.

Economists' studies and Nobel Prize3

டக்ளஸ் மற்றும்  டெப்விக் ஆகிய இருவரும் இந்த உள்ளார்ந்த பலகீனத்திற்கு  தீர்வுகளை காண  முன்வந்துள்ளனர். டெபாசிட்கள் மீதான அரசின் காப்பீடு ஒன்றை அறிமுகம் செய்தனர்.

வங்கியில் போட்டு வைத்திருக்கும் டெபாசிட்கள் மீது காப்பீடு இருக்கும் போது வதந்திகள் கிளப்பி விடப்பட்டாலும்  அதனை நம்ப மாட்டார்கள். காப்பீடு இருக்கிறது என்று நம்பிக்கையுடன் இருப்பார்கள்.  இதன் காரணமாக உலகின் பெரும்பாலான வங்கிகளில் இந்த முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Economists' studies and Nobel Prize3
டக்ளஸ் டைமன்ட்

1984 ஆம் ஆண்டில் டைமன்ட் எழுதிய மற்றொரு ஆய்வுக் கட்டுரையில் அடுத்த ஒரு முக்கிய நிபந்தனையை குறிக்கின்றார்.  தங்கள் வங்கிச் சேமிப்பை பாதுகாக்கவும், கடன் வாங்கியவர்களின்  செயல்பாடுகளை கண்காணிக்கவும், வங்கிகள் தந்த உத்தரவாதத்தை  வங்கிகள் நிறைவேற்ற வேண்டும் என்றும் டைமன்ட் கூறினார். உண்மையில் பல முதலீடுகள்  ஆபத்தானவை.  கொடுத்த பணம் வட்டியும் முதலும் திரும்பவும் கிடைக்கும் என்பது  பொதுவாக நிலையற்றதே.

கடன் வாங்கியவர்கள் எவ்வளவு தூரம் சிறப்பாக தங்கள் பணிகளை செய்கிறார்களோ அவ்வளவு தூரம் கடன் முழுவதும் திரும்ப வந்து சேரும்.  கடன் பெற்ற ஒருவர் தனக்கு நேரம் சரியில்லை.  அதனால் கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை என்று கூறி தப்பிக்க முயற்சி செய்யலாம்.

தங்கள் பணியை செம்மையாக செய்து பணத்தை வீணாக்காதவர்கள் கூட சில நேரங்களில் திவாலாகலாம். இதனால் சமூகத்திற்கு தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். 

ஒரு குறிப்பிட்ட செலவு விகிதத்தில் வங்கிகள் கடன் கொடுத்தவர்களை கண்காணிக்க முடியும் என்று டைமன்ட் கூறுகிறார். முதலில் கடன் கொடுக்கும் போது ஒரு துவக்க நிலை மதிப்பீட்டை செய்து விட்டு, பின்னர் கடன் வாங்கியவர்கள் செய்த முதலீட்டை தொடர்ந்து கண்காணிக்கலாம்.

இதன் காரணமாக பலரை திவாலாகாமல் தடுப்பதோடு சமூக செலவுகளும் குறையும். வங்கி ஓர் இடைத்தரகராக நில்லாமல் இவ்வாறு செயல்படுவது கண்காணிப்பு செய்வது கொஞ்சம் கடினமான பணி. செலவு பிடிக்கக் கூடியது. நேரடியாகவோ மறைமுகமாகவோ  முதலீடுகள் செய்துள்ள அனைவருக்கும் நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு வர வேண்டும்.தங்கள் பணம் சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது என்ற உணர்வு வர வேண்டும்.

வங்கியை கண்காணிப்பது யார்?

கடன் பெற்றவர்களை வங்கிகள் கண்காணிப்பு செய்கிறது என்றால் வங்கியை கண்காணிப்பது யார்? என்ற கேள்வி எழுகிறது. ஒவ்வொரு கடனாளியும் ” வங்கிகளை கண்காணிப்பது யார்?”  என்ற கேள்வியை நடைமுறையில் கேட்க முடியாது. அதேபோல் ஒவ்வொரு கடனாளியிடம்  இருந்தும் சரியான பதிலை எதிர்பார்க்க முடியாது.  எந்தவொரு வங்கியும் கடனாளி வங்கியை  கண்காணிக்கும் வகையில்  கட்டமைக்கப்படவில்லை என்பதை டைமன்ட் தனது கட்டுரையில் தெளிவு படுத்துகிறார்.

Economists' studies and Nobel Prize3

வங்கிகள் கடன்காரர்களை கண்காணிப்பதை தவிர்த்தால் வங்கிகளின் கடன்கள் திரும்பி வருவதில் சிக்கல் உருவாகும். இதன்காரணமாக முறைப்படி கடன்களை திருப்பிச் செலுத்துவதிலும் அதனைத் தொடர்ந்து வங்கிகள் சீர்குலைவை சந்திப்பதிலும் சென்று முடியும். கடன்காரர்களை கண்காணிப்பது  வங்கிகளின் சொந்த விருப்பம். கடன்காரர்கள் வங்கியை கண்காணிப்பது தேவைப்படாமலே இது சாத்தியமாகிறது. வங்கிகள் எவ்வளவு தான் சிறப்பாக கடன்காரர்களை கண்காணித்தாலும் சில கடன்கள் திரும்பி வராமல் இருப்பது உண்டு.

வங்கிகள் இந்தக் கண்காணிப்பு பணியை  சிறப்பாக செய்யாமல் பொறுப்பில்லாமல் இருந்தால் பெரிய வங்கிகள் கூட சிறிய கடன் வராமல் போவதைத் தொடர்ந்து வீழ்ச்சி அடையும் அபாயம் இருக்கிறது. ஏனேனில் ஒரு வங்கி அதிக எண்ணிக்கையிலான கடன் வாங்குபவர்களுக்கு கடன் வழங்குகிறது.

அதில் ஒரு சில கடனாளிகள் கடனை திருப்பி செலுத்த வில்லையென்றாலும் எல்லாக் கடன்களிலும் ஏற்படும் இழப்புகள் சிறியதாகவும்  கண்காணிக்க கூடியதாகவும் இருக்கும். வங்கிகளின் கடன் மேலாண்மை உத்திகளில் ஒன்று எல்லாக் கடன்களையும் ஒரேமாதிரி பார்க்காமல் இருப்பது.  இதற்காக செய்யப்படும் செலவுகள் திவாலாவதை குறைக்கிறது.  இதனால் கிடைக்கும் நன்மைகள் சமூகத்தில் அனைவருக்கும் சென்று சேரும் ‌.

வங்கிகள் இருப்பதால் தான் சேமிப்புகளை உற்பத்தி சார்ந்த முதலீடுகளாக மாற்ற முடிகிறது என்பதை டைமன்ட் தனது ஆய்வுகள் மூலம் நிரூபித்தார். இதற்கான நிர்வாகச் செலவை  ” கடன் தரகு செலவு ” என்று அவர் வரையரை செய்தார்.

இந்த செலவு குறைப்பு சமூகம் சார்ந்த பயனுள்ள முதலீட்டு திட்டங்களுக்கான நிதி அனுமதிக்கப்பட வழி வகை கிடைத்தது.

1930 களில் நடந்ததைப் போல ஒரே நேரத்தில் வங்கிகள் திவாலாகும் போது கடன் தரகு செலவு வியத்தகு அளவில் அதிகரிக்கிறது. பொருளாதாரத்தை முடக்கும் அளவு கூட அதிகரிக்கும். கண்காணிப்பு செய்ய நல்ல புத்தி கூர்மை தேவை. ஆனால் அதையும் தாண்டி வங்கிகள் தோல்வியை தழுவி பயனின்றி போய்விடுகிறது.

மீண்டும் இதே அளவு பயன்படுத்தப் படுவதற்கு நீண்ட காலம் தேவைப் படுகிறது. வங்கிகளின் தோல்வியும் அதன் விளைவுகளும் முற்றிலும் எதிர்மாறான நிலையை அடைகிறது. இது நீண்ட கால விளைவுகளை உடையது.

நவீன வங்கி ஒழுங்குமுறைக்கு அடித்தளம்

Economists' studies and Nobel Prize3
பிலிப் டெப்விக்


பெர்ன்னான்க் பிலிப் டெப்விக் மற்றும் டக்ளஸ் டைமன்ட் ஆகியோருக்கு இந்த ஆராய்ச்சிக்கு  நோபல் பரிசு மூலம் கிடைத்துள்ள  அங்கீகாரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. வருங்கால ஆய்வுகளுக்கும் இது முக்கியம்.

இது வங்கிகள் பற்றிய புரிதலை மேம்படுத்தும். இதன் மூலம் வங்கி ஒழுக்காற்று விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ள உதவும். வங்கிகளை நிர்வகிக்க இது பயனுள்ளதாக இருக்கிறது.

டைமன்ட் மற்றும் டெப்விப் ஆகியோரின் கோட்பாட்டு ரீதியான கண்டுபிடிப்பு வங்கிகளின் முக்கியத்துவத்தை உணர வைத்தது. அவற்றின் உள்ளார்ந்த பலவீனங்களே நவீன வங்கி முறையின் ஒழுங்காற்று விதிமுறைகளை உருவாக்க காரணமாக அமைந்தது. இது வங்கிகளின் நிதி நிர்வாக முறை நிலையாக இருப்பதற்கு அடித்தளமிட்டது. பெர்ன் னான்க் கண்டுபிடிப்புகளையும் இவற்றோடு இணைத்து, ஏன் சில சமயம் நெறிமுறைகள் இருந்தும் தோல்வி ஏற்படுகிறது என்பதை விளக்குகிறது. பெருந் தொற்று காலம் போன்று வரவிருக்கும் காலங்களிலும்  நெருக்கடிகளை கட்டுப்படுத்த இது  துணை புரியும்.

2000 ஆண்டுகளின் முற்பகுதியில் வங்கிகள் போன்ற முதிர்வு மாற்றம் வழியாக பணம் சம்பாதிக்கும் புதிய இடைத்தரகர்கள் ( நிறுவனங்கள்)  முறைப்படுத்தப்பட்ட வங்கிகளுக்கு வெளியே தோன்றின. 2008-2009 ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நிதி நெருக்கடிக்கு இந்த நிழல் வங்கிகளே முக்கிய காரணம். டைமன்ட் மற்றும் டெப்விப் கோட்பாடுகள் இதனை நன்கு ஆராய்ந்திருக்கிறது.  இருந்தபோதிலும் வேகமாக மாறிவரும் நிதிக் கட்டமைப்பின் இயல்புக்கு ஏற்றதாக வகுக்கப்பட்ட நெறிமுறைகளாக அவை இருக்காது.

இந்த மாறிவரும் நிதிக் கட்டமைப்பின் இயல்புக்கு ஏற்ப எவ்வாறு நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்று இப்போதே பதில் அளிக்க முடியாது. வங்கிகளில் மேற்கொள்ளப்படும் சேமிப்பு காப்பீடும் நாம் நினைப்பதற்கு தகுந்தது போல  செயல்படாது.

அவ்வாறு செய்தால் அது மோசமான ஊக வாணிபத்தில் ஈடுபடும் வங்கிகளை ஊக்குவிக்கும். நெருக்கடியான  காலகட்டத்தில் வங்கி முறைமை பாதுகாக்க வேண்டிய சூழல் வங்கியாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் ஏற்படலாம். இதில் இயல்பு லாபத்திற்கு மேல் அதீத லாபமும் கிடைக்கும்.

வங்கி  முதலீட்டு விதிமுறைகள் கடன்கள் மீதான வரையறையை உருவாக்கலாம். இது பொருளாதாரத்திற்கு அவசியமானதாகவும் இருக்கலாம்.  இவ்வாறு உருவாக்கப்படும் விதிமுறைகள் அவற்றின் சாதக பாதகங்கள் பற்றிய ஆய்வுகளும் அவசியத் தேவை. மாறிவரும் கால சூழ்நிலைக்கு தகுந்தவாறு அது எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும் ஆராய வேண்டும்.

தொடர்ந்து நிதி நெருக்கடிகள் உருவாகாமல் இருக்க நிதிச் சந்தை தனது பணிகளை எவ்வாறு சிறப்பாக நிறைவேற்ற வேண்டும்? எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும்? சேமிப்புகளை உற்பத்தி சார்ந்த முதலீடுகளாக எப்படி மாற்றுவது? என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.

2022 ஆம் ஆண்டின் பொருளாதார நோபல் பரிசு அத்தகைய ஆராய்ச்சிகளை கௌரவிப்பதாகவும்  இனி வரும் காலங்களில் அதில் ஈடுபட உற்சாகம் ஊட்டுவதாகவும் அமைந்துள்ளது.

இந்த நோபல் பரிசு சமுதாயத்தை ஏற்கனவே இருந்ததை காட்டிலும் நல்ல நிலையில் இருக்கச் செய்வதற்காகவும் சமகால சவால்களுக்கு ஈடு கொடுத்தமைக்காகவும் வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற இந்த ஆய்வுகள் நிதி நெருக்கடியை குறைக்க வழிவகை செய்கிறது.

அந்த நிதி நெருக்கடிகள் நீண்ட கால பெரு மந்தங்களாக  உருவாகாமல் தடுக்க  வழிவகை செய்கிறது. இதன் மூலம் சமூகத்தில் கடுமையான பாதக விளைவுகள் ஏற்படுவதிலிருந்து தடுக்கிறது ‌. இதுவே இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு நமக்கு அளித்துள்ள மிகப் பெரிய நன்மையாகும்.

Economists' studies and Nobel Prize3
பெர்ன்னான்க்

1.பெர்ன்னான்க் 1953 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். 1979 ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் மசாசூட் பல்கலைக்கழகத்தில் ‌முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது பூருகிங்ஸ்  ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்து வருகிறார்.

2,டக்ளஸ் டைமன்ட் 1953 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார்.1980 ஆம் ஆண்டு யேல் பல்கலைக்கழகத்தில் ‌முனைவர் பட்டம் பெற்றார். தற்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

3. ஃபிலிப் டெப்விப் 1955 ல் பிறந்தார்..1979 ல் யேல் பல்கலைக்கழகத்தில் ‌முனைவர் பட்டம். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

கட்டுரையாளர் குறிப்பு

Economists' studies and Nobel Prize3

பேராசிரியர் மற்றும் தலைவர் பொருளாதாரத் துறை ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஈரோடு.

பொருளாதார வல்லுர்களின் ஆய்வுகளும்… நோபல் பரிசும்! – பகுதி 2

பொருளாதார வல்லுநர்களின் ஆய்வுகளும்… நோபல் பரிசும்! – பகுதி 1

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *