கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 100 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், இந்தியாவில் காற்றின் தரம் மிகச் சிறப்பான வகையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
நாட்டில் உள்ள நான்கு பெருநகரங்களில் 2024ஆம் ஆண்டு தேசிய தூய்மையான காற்று திட்டத்தின்கீழ் ‘சுத்தமான காற்று’ என்ற இலக்கு வெறும் 74 நாட்களில் எட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
காற்று மாசுபாட்டைக் கண்டறியும் மாநிலக் காற்றுமாசு கட்டுப்பாட்டு வாரியங்களின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், காற்றில் மாசை அதிகரிக்கும் எட்டு அம்சங்களில் முக்கியமான நான்கு அம்சங்களான வாகனப் போக்குவரத்துக்குத் தடை, தொழிற்சாலைகள் இயங்காதது, பொது கட்டுமான பணிகள் மற்றும் செங்கல் சூளைகள் போன்றவற்றின் செயல்பாடுகள் முற்றிலும் குறைந்துவிட்டதால் காற்று மாசு மிகவும் குறைந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
காற்றின் தரம் மிக மோசமான அளவில் சென்னையில் பாதிப்படையவில்லை என்பதால் பெரு நகரங்களின் பட்டியலில் சென்னை சேர்த்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
**- ராஜ்**�,