திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தமிழகத்தை சேர்ந்த மூவருக்கு ஆந்திர மாநில அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு தலைவராக ஏற்கனவே கருணாகர ரெட்டி நியமிக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளார். மீதமுள்ள உறுப்பினர்களை நியமிப்பதற்கான பரிசீலனை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் ஆந்திர மாநில அரசு இன்று (ஆகஸ்ட் 26) வெளியிட்டுள்ள அறிக்கையில் 24 பேரை உறுப்பினர்களாக நியமித்துள்ளது.
அதில் தமிழகத்தின் சார்பில் திருப்பூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம், சென்னையை சேர்ந்த டாக்டர் எஸ். சங்கர், கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் உள்பட 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அமித்ஷா தரப்பு பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் தொடர்ந்து மூன்றாவது முறையாக அறங்காவலர் குழு உறுப்பினராக பதவி ஏற்க உள்ளார்.
நிர்மலா சீதாராமன் தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சங்கர் இரண்டாவது முறையாக தொடர்ந்து பதவி ஏற்க உள்ளார்.
திருப்பூர் பாலு என்ற பால சுப்ரமணியம் தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலதிபரான இவர் முதல்வர் ஸ்டாலினின் குடும்ப நண்பர்.
கடந்த ஆண்டு ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி நடந்த பாலுவின் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு முதல்வர் தனி விமானத்தில் வந்து சென்றார்.
பால சுப்பிரமணியம் தற்போது பழனி ஆண்டவர் கோவில் நிர்வாகக் குழு உறுப்பினராகவும், அறங்காவலராகவும் உள்ளார்.
மேலும் அவரது தம்பி ராம மூர்த்தி, ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதா கிருஷ்ணனின் சம்பந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பால சுப்பிரமணியத்தின் பெயர் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானத்தில் உறுப்பினராக முதல்வர் ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் சேர்க்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பள்ளியில் மதவெறி… வீடியோவால் அதிர்ச்சி: உ.பி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு!
நிலாவில் உலா வரும் ரோவர்: இஸ்ரோ புதிய அப்டேட்!