கோவை: My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது!

தமிழகம்

கோவையில் My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் உள்பட 70 பேரை போலீசார் இன்று (பிப்ரவரி 10) கைது செய்தனர்.

கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், My V3 Ads நிறுவனம் குறிப்பிட்ட தொகையை தங்கள் நிறுவனத்தில் செலுத்தி, செல்போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று அறிவித்தது. மேலும், மருந்துப் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

இதனையடுத்து திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த பலரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

My V3 Ads நிறுவனம் மோசடி செய்ததாகவும், மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்துகள் விற்பனை செய்ததாகவும் பொதுமக்கள் சிலர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தனர். அதனடிப்படையில், My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் பலர் கோவை நிலாம்பூர் பகுதியில் திரண்டனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

மோசடி வழக்கு தொடர்பாக கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் சக்தி ஆனந்த் ஆஜரானார்.

இந்தநிலையில், தனது நிறுவனத்தின் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மற்றும் அந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் 70 பேர் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று தர்ணாவில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து அவர்கள் அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

கோவை காவல் ஆணையர் அலுலகத்தில் தனது ஆதரவாளர்களுடன் சக்தி ஆனந்த் தர்ணாவில் ஈடுபட முயன்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தளபதி 69: இந்த ரெண்டு பேருல… விஜய் யாரை செலக்ட் பண்ணப்போறாரு?

பொங்கல் வேட்டி, சேலை ஊழல் குறித்து விஜிலென்ஸில் புகார்: அண்ணாமலை

+1
1
+1
2
+1
0
+1
3
+1
1
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *