குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பிப்ரவரி 18 ஆம் தேதி மதுரை வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு படை அதிகாரிகள் இன்று(பிப்ரவரி 15) மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும் சித்திரை வீதியில் உள்ள 70 நடைபாதை கடைகள் அகற்றப்பட்டுள்ளன.பிப்ரவரி 17,18 தேதிகளில் டிரோன்கள் பறக்கவும் மதுரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வருகைதர உள்ளார் திரவுபதி முர்மு. வரும் 18 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அவர் வழிபாடு செய்ய உள்ளதால் அவரது வருகையை ஒட்டி மதுரையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
மதுரை ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். மேலும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று பார்வையிட்டனர். தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலானது 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
மதுரையில் மக்கள் அதிகம் கூடுகிற அனைத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் ஆகிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
இதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மனை பிரதமர் மோடி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
திமுக செய்த மிகப்பெரிய சாதனை இது தான்: ஈபிஎஸ் பிரச்சாரம்!
ஆகம குழு : சத்தியவேல் முருகனார் நியமனத்துக்கு இடைக்கால தடை!