சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 24) சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.43,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கத்தின் விலை கடந்த ஒரு வார காலமாக குறைந்து வந்ததது. இதனால் தங்க ஆபரணங்கள் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த மக்கள் நிம்மதியடைந்தனர். நேற்று (ஜூன் 23) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.43,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.43,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.5,455-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலையுடன் இணைந்து வெள்ளியும் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 அதிகரித்து ரூ.74,500-க்கும் ஒரு கிராம் 50 காசுகள் அதிகரித்து ரூ.74.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
சிறுவனை இழுத்து சென்ற சிறுத்தை சிக்கியது!