சென்னையில் இன்று (மே 16) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட்
தங்கம் விலை கடுமையாக விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக விலை மாற்றமில்லாமல் ஒரே விலையில் விற்பனையானது. இந்நிலையில் இன்று (மே 17) சற்று விலை குறைந்துள்ளது. நேற்று (மே 16) 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.45,720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த விலையில் இருந்து இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.45,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.45 குறைந்து ரூ.5,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலையும் சரிவை சந்தித்துள்ளது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.600 விலை குறைந்து ரூ.78,200-க்கும் ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து ரூ.78.20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மோனிஷா
கர்நாடக முதல்வர் யார்?: இன்று அறிவிக்கிறார் கார்கே
குற்றவாளிக்கு நிவாரணமா?: எடப்பாடி கேள்வி!