தொடர்ந்து காயங்களால் அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா, தனது அயராத பயிற்சினால் இந்திய அணியின் ஆஸ்தான நாயகனாக வளர்ந்துவந்தார். பேட்டிங், பவுலிங் என இரண்டு பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய பாண்டியா, ஒரு கேப்டனாகவும் தனது திறனை தொடர்ந்து மேம்படுத்தி வந்தார்.
2022 ஐபிஎல் தொடரில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் ஜெய்ன்ட்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த தொடரில், அவரின் கேப்டன்ஸி ரசிகர்களிடம் வெகுவான பாராட்டை பெற்றது.
இதன் காரணமாக, 2022 ஜூன் மாதத்தில் ஐயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக களமிறக்கப்பட்டார்.
இதை தொடர்ந்து, இந்தியா விளையாடிய பல பிரதான டி20 தொடர்களில் ஹர்திக் பாண்டியாவே அணியை வழிநடத்தினார். 2023 ஐபிஎல் தொடரிலும் குஜராத் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார்.
இந்நிலையில், 2023 உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்து, தொடரில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா, மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு 2024 ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்கினார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து ட்ரான்ஸ்பர் முறையில் ஹர்திக் பாண்டியாவை வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, அவரை அணியின் கேப்டனாகவும் நியமித்தது.
ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததால், அவருக்கு மும்பை அணி ரசிகர்களிடையே எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது.
இந்த தொடரில், பாண்டியா தலைமையில் 6 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி, 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளதால், அந்த எதிர்ப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 2024 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா இடம் பெறுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.
அண்மையில், டி20 உலகக்கோப்பை அணி தேர்வுக்காக, கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் நடத்திய ஆலோசனையில், 2024 ஐபிஎல் தொடரில், ஹர்திக் பாண்டியா முறையாக பந்துவீசினால் மட்டுமே அவரை அணியில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இதுவரை 6 போட்டிகளில் களமிறங்கியுள்ள ஹர்திக் பாண்டியா, இதுவரை 11 ஓவர்களை மட்டுமே வீசியுள்ளார். அந்த 11 ஓவர்களில் 12.00 எகானமியுடன் 132 ரன்கள் வழங்கியுள்ளார். மேலும், தற்போது வரை 3 விக்கெட்களை மட்டுமே அவர் இந்த தொடரில் கைப்பற்றியுள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மின்னம்பலம் மெகா சர்வே: விளவங்கோடு… வெற்றி கோட்டைத் தொடுவது யார்?
போர் பதற்றம்: ஈரான் அணுமின் நிலையங்களை குறிவைக்கும் இஸ்ரேல்!
வேங்கைவயல் விசாரணையில் ஏன் இவ்வளவு தாமதம்? – நீதிபதிகள் கேள்வி!
திருநங்கையாக நடிக்கும் சிம்பு.. இது நம்ப லிஸ்ட்லயே இல்லயே..?!