வயசெல்லாம் வெறும் நம்பர் தான்…வரலாற்றை மாற்றியெழுதிய போபண்ணா

Published On:

| By Manjula

இந்திய வீரர் ரோகன் போபண்ணா ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில், கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.

டென்னிசை பொறுத்தவரை ஆஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் மற்றும் விம்பிள்டன் என நான்கு வகையான தொடர்கள் நடத்தப்படுகின்றன.

 

கிராண்ட்ஸ்லாம் என்னும் உயரிய அந்தஸ்து பெற்ற பட்டத்திற்கான தொடர்கள் என்பதால், மேற்கண்ட டென்னிஸ் போட்டிகளுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர், தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் ஜோடி இன்று (ஜனவரி 27) நடைபெற்ற இறுதிச்சுற்றில், இத்தாலியின் சைமன் பொலேலி-ஆண்ட்ரியா வவாசூரி ஜோடியுடன் மோதியது.

இதில் போபண்ணா-எப்டன் ஜோடி 7-6, 7-5 என்ற செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற புதிய சாதனையை போபண்ணா (43) படைத்துள்ளார்.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கலெக்டர்களை அழைத்து பாராட்டிய கவர்னர்!

”இருவர் வானம் வேறென்றாலும்” காதலர் குறித்து பிரியா பவானி ஷங்கர் உருக்கம்!