இன்று பவுலராக வருகிறாரா விராட் கோலி?: ராகுல் டிராவிட் சூசகம்!

விளையாட்டு

2023 உலகக்கோப்பை தொடரில், இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா, முதல் அணியாக அரையிறுதிக்கு சென்றுள்ளது. ஆனால், இப்படியான முக்கிய கட்டத்தில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, தனது இடது கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீள முடியாததால், தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் இலங்கை ஆகிய போட்டிகளில், ஹர்திக் பாண்டியாவுக்கான சரியான மாற்றை கண்டுபிடிக்க முடியாததால், சூர்யகுமார் யாதவ் அவருக்கு பதிலாக களமிறங்கினார்.

 

 

தற்போது, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே முகமது ஷமி – ஜஸ்ப்ரீத் பும்ரா – முகமது சிராஜ் என வலுவான வேகப் பந்துவீச்சு தாக்குதலை கொண்ட இந்திய பிளேயிங் 11-ல் அவருக்கான வாய்ப்பு மிக குறைவே.

டாப் ஆர்டரில் பேட்ஸ்மேன்னாக களமிறங்கும் ஹர்திக் பாண்டியா, பந்துவீச்சில் இந்திய அணியின் 6வது பவுலராகவும் செயல்பட்டு வந்தார். ஆனால், தற்போது பாண்டியா தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், இவருக்கான நேர் நிகர் மாற்று இந்திய அணியின் 15 பேர் கொண்ட குழுவில் இல்லை.

இதன் காரணமாக, 2023 உலகக்கோப்பை தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இந்தியா சந்திக்கவுள்ள சவால்கள் குறித்தும், அதை எதிர்கொள்ள இந்தியா கைவசம் வைத்துள்ள திட்டங்கள் குறித்தும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராகுல் டிராவிட், “முறையான 6வது பவுலரை பெறும் சூழ்நிலையில் அணி இல்லை என்பதே எதார்த்தம். ஆனால், நாங்கள் ‘தவறான கால், இன்-ஸ்விங்’ மூலம் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எங்கள் அணியின் ஆக்ரோஷக்காரரை பந்துவீச வைக்கலாம்” என விராட் கோலியை குறிப்பிட்டு கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் பேசிய டிராவிட், கடந்த போட்டியிலேயே விராட் கோலியின் பந்துவீச்சை மைதானத்தில் உள்ள ரசிகர்கள் எதிர்பார்த்தனர் என்றும், நாங்களும் கிட்டத்தட்ட விராட் கோலியை பவுலிங் செய்ய வைக்கலாம் என்ற எண்ணத்திற்கு வந்தோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அடுத்தடுத்த போட்டிகளில் விராட் கோலி ஒரு சில ஓவர்களை வீசி, ஒரு சில விக்கெட்களை வீழ்த்துவார் என நம்புகிறேன்”, என்றும் டிராவிட் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் பந்துவீச வாய்ப்புள்ளதாகவும் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்ட காரணம் குறித்தும் பேசியுள்ள ராகுல் டிராவிட், ” எங்களிடம் பேட்டிங், சுழற்பந்து, பவுலிங் ஆல்-ரவுண்டர் என அனைத்திற்கும் பேக்-அப் உள்ளது. ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சரியான பேக்-அப் இல்லை. அதனாலேயே பிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

முரளி

வேகக் கட்டுப்பாடு மீறல்: முதல் நாளில் 121 வழக்குகள்… ரூ.1.21 லட்சம் அபராதம்!

ICC World Cup : அரையிறுதிக்கு போட்டி போடும் 6 அணிகள்.. வாய்ப்புகள் என்ன?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *