2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இன்னும் 9 போட்டிகளே மீதமுள்ள நிலையில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதியில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்துவிட்டன. மறுமுனையில், வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் தொடரை விட்டு அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டன.
இந்நிலையில், அரையிறுதியில் மீதமுள்ள 2 இடங்களுக்காக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய 6 அணிகள் போட்டிபோட்டுக் கொள்கின்றன. six teams are fight for semifinal
இந்த அணிகளுக்கான அரையிறுதி வாய்ப்பு என்ன?
ஆஸ்திரேலியா
தற்போது 10 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் & வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில், ஏதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே போதும்.
ஒருவேளை, 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தாலும் கூட, ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலியா கொண்டுள்ளது.
நியூசிலாந்து
4 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்துள்ள நியூசிலாந்து, அரையிறுதிக்கு செல்ல இலங்கைக்கு எதிரான தனது கடைசி போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும்.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தங்களது மீதமுள்ள போட்டிகளில் தோல்வியடைய வேண்டும்.
ஒருவேளை, பாகிஸ்தான் தனது கடைசி போட்டியிலும், ஆப்கானிஸ்தான் தனது அடுத்த 2 போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் வெற்றி பெற்றால், ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு நியூசிலாந்துக்கு உள்ளது.
பாகிஸ்தான்
ஒருபுறத்தில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் வெல்ல வேண்டும்.
மறுபுறத்தில், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தங்களது மீதமுள்ள போட்டிகளில் தோல்வியடைய வேண்டும்.
தற்போது, பாகிஸ்தான் ரன் ரேட்டில் மிகவும் பின்தங்கியுள்ளதால், ஒருவேளை நியூசிலாந்து அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால், இங்கிலாந்துக்கு எதிராக யாரும் எதிர்பார்க்காத இமாலய வேற்றையை பெறாத பட்சத்தில், ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு மிகக்குறைவே.
ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு செல்ல, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் வென்றாலே போதும்.
ஒருவேளை, இவற்றில் எதாவது ஒரு போட்டியில் மட்டுமே ஆப்கானிஸ்தான் அணியால் வெற்றி பெற முடிந்தது என்றால், நியூசிலாந்து & பாகிஸ்தான் அணிகள் தங்களது கடைசி போட்டியில் தோல்வியடையும் பட்சத்தில், ஆப்கான் அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
பாகிஸ்தானை போலவே, ரன் ரேட்டில் மிகவும் பின்தங்கியுள்ள ஆப்கானிஸ்தான், ஒரு போட்டியில் தோல்வியடைந்து, நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் தங்களது கடைசி போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில், அந்த அணிக்கான அரையிறுதி வாய்ப்பு மிக மிக குறைவே.
இலங்கை & நெதர்லாந்து
தலா 4 புள்ளிகளுடன், இலங்கை & நெதர்லாந்து ஆகிய அணிகள் புள்ளிப் பட்டியலில் 7வது மற்றும் 8வது இடங்களில் உள்ளன. தங்களது அடுத்த 2 போட்டிகளில் இமாலய வெற்றி பெற்று, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகள் தங்களது அடுத்த போட்டிகளில் படுதோல்வியடையும் பட்சத்தில், ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்ல இந்த அணிகளுக்கு வாய்ப்பு உள்ளது.
இது நடப்பதற்கான சூழல் மிக மிக குறைவு என்றாலும், பல அதிரடி திருப்பங்களை சந்தித்து வரும் இந்த உலகக்கோப்பையில், தற்போதைய நிலவரப்படி இலங்கை & நெதர்லாந்து ஆகிய அணிகளின் அரையிறுதி கனவு இன்னும் உயிர்ப்புடனேயே இருக்கிறது.
இதில் எந்த 2 அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? six teams are fight for semifinal
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
முதல் கருப்பு ஹீரோவாக ராகவா லாரன்ஸ்.. ஜிகர்தண்டா 2 ட்ரெய்லர் எப்படி?
டெங்கு பாதிப்பு: அதிமுக முன்னாள் அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
Australia and new Zealand qualify semis
I like Newzealand Vs India semifinal