தென்னாப்பிரிக்கா டி20 லீக் : பைனலில் பந்தாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி சாம்பியன்!

விளையாட்டு

தென்னாப்பிரிக்கா டி20 லீக் தொடரின் இறுதி போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

தென்னாப்பிரிக்கா டி20 லீக்கின் முதல் தொடர் கடந்த மாதம் 10ம் தேதி கேப்டவுனில் தொடங்கியது.

ஒவ்வொரு போட்டிகளிலும் அனல் பறந்த நிலையில் ஜோகன்ஸ்பர்க்கில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரிட்டோரியா கேபிடள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதின.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட் செய்த பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி 20 ஓவர் முடிவில் வெறும் 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சீசன் முழுவதும் அபாரமாக விளையாடி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி இறுதிப்போட்டியில் ஈஸ்டர்ன் கேப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பேட்டிங்கில் சொதப்பியது.

அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த சன்ரைசர் ஈஸ்டர்ன் கேப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆடம் ரோஷிங்டன் 30 பந்தில் அரைசதம் (57) அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தாலும், ஜோர்டன் ஹெர்மன்(22) மற்றும் ஏய்டன் மார்க்ரம்(27) ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

16.2 ஓவர்களிலேயே 137 ரன்களை குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சன்ரைசர் ஈஸ்டர்ன் கேப் அணி, தென்னாப்பிரிக்கா லீக் தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தையும் தட்டி பறித்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

டிஜிட்டல் திண்ணை: ஈரோட்டில் சாதி ஓட்டு- சபரீசன் விசிட்… எடப்பாடி சைலன்ட்,  சீமான் ட்விஸ்ட்!

இடைத்தேர்தலில் அண்ணாமலையுடன் சேர்ந்து பிரச்சாரமா? : எடப்பாடி பதில்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *