தள்ளிப்போகும் ஐபிஎல் தொடர்… முதல் போட்டியில மோதப்போறது இவங்க தான்!

Published On:

| By Manjula

நடப்பு ஐபிஎல் தொடர் தள்ளிப்போய் இருப்பதாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

உலகெங்கும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடர் தற்போது மார்ச் மாதத்தில் இருந்து, ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போய் உள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி முதல் போட்டி வருகின்ற ஏப்ரல் மாதம் 1-ம் தேதி மும்பையின் டிஒய் படேல் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

இந்த முதல் போட்டியில் வழக்கம்போல சென்னை அணி களமிறங்க, குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்த்து ஆடுகிறது. மொத்தம் 74 போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதனால் இறுதிப்போட்டி ஜூன் 2-ம் தேதியில் நடைபெறவுள்ளது.

ஐபிஎல் தொடர் முடிந்தவுடனேயே உலகக்கோப்பை தொடர் வருவதால், இந்திய அணி வீரர்கள் ஓய்வு இல்லாமல் உலகக்கோப்பை தொடரிலும் ஆடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப், 5௦ ஓவர் உலகக்கோப்பை போன்றவற்றை இழந்த இந்திய அணிக்கு தற்போது டி2௦ உலகக்கோப்பை தொடர் மட்டும் தான் ஆறுதலாக இருக்கிறது.

அதிலும் இந்திய அணி சொதப்பினால் நாடு முழுவதுமுள்ள ரசிகர்கள் கொந்தளித்து விடுவார்கள் என்பதால் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.

நடப்பு ஐபிஎல் தொடர் தற்போது தள்ளிப்போய் இருப்பதால், உலகக்கோப்பை தொடருக்கு தயாராக இந்திய அணிக்கு போதிய அவகாசம் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது.

அதோடு 2024-ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலும் வரவிருப்பதால், இந்த ஆண்டு இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எது எப்படியோ முன்னெப்போதும் இல்லாத வகையில், ஐபிஎல் தொடர் இந்தாண்டு கடும் சிக்கல்களை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சுவிட்சர்லாந்து இ-மெயில் நிறுவனம் கொடுத்த துப்பு!

கோவை: My V3 Ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel