7வது இடத்தில் ஆர்சிபி: பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு என்ன?

விளையாட்டு

2024 ஐபிஎல் தொடர் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் தலா 16 புள்ளிகளுடன் முதல் 2 இடங்களை பிடித்து கிட்டத்தட்ட தங்கள் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில், மீதமுள்ள 2 இடங்களுக்காக அனைத்து அணிகளும் கடுமையாக மோதிக்கொள்கின்றன.

விளையாடிய 11 போட்டிகளில் 3-இல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, கிட்டத்தட்ட தனது பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது.

இந்நிலையில், விளையாடிய முதல் 8 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் இருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணி, திடீரென 3 போட்டிகளில் ஹாட்-ட்ரிக் வெற்றி பெற்று, தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது.

ஆர்சிபி பிளே-ஆஃப் செல்ல 4 நிபந்தனைகள் என்ன?

நிபந்தனை 1:

பெங்களூரு அணி தனது பிளே-ஆஃப் வாய்ப்பை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள, மீதமுள்ள 3 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டும். நல்ல ரன்-ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் கூடுதல் சிறப்பு. அப்படி வெற்றி பெறும் பட்சத்தில், ஆர்சிபி அணி லீக் சுற்று போட்டிகள் முடிவுபெறும் நிலையில் 14 புள்ளிகளை பெற்றிருக்கும்.

நிபந்தனை 2:

தற்போது 12 புள்ளிகளுடன் 3, 4 மற்றும் 5வது இடங்களில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் ஆகிய அணிகள், தங்களுக்கு மீதமுள்ள போட்டிகளில் ஒன்றுக்கும் அதிகமான போட்டிகளில் வெல்லக்கூடாது.

நிபந்தனை 3:

அதேபோல, 10 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தனக்கு மீதமுள்ள 3 போட்டிகளில், குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது கட்டாயம் தோற்க வேண்டும்.

நிபந்தனை 4:

மேலும், புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் 8 மற்றும் 9வது இடங்களில் உள்ள பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய அணிகள், தங்களுக்கு மீதமுள்ள 3 போட்டிகளில், ஒரு போட்டியில் தோற்க வேண்டும்.

இந்த 4 நிபந்தனைகளும் நிகழும் பட்சத்தில், 14 புள்ளிகள் பெற்றிருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரன்-ரேட் அடிப்படையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

முஸ்லீம்களை எதிரியாக்காமல் இந்து அடையாளத்தை உருவாக்க முடியுமா?

ஹெல்த் டிப்ஸ்: அடிக்கடி ஜூஸ் குடிப்பவரா நீங்கள்? இதை அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா : வாழைத்தண்டு மோர்

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *