கிச்சன் கீர்த்தனா : வாழைத்தண்டு மோர்

காலை வேளையில் எப்போதும் காபி, டீ குடிப்பவர்கள், கோடை வெப்பத்தைத் தணிக்க இந்த வாழைத்தண்டு மோர் செய்து குடியுங்கள்.  இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவும். மேலும், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கிய பானமாக அமையும்.

என்ன தேவை?

வாழைத்தண்டு – ஒன்று (நறுக்கவும்)
கட்டித் தயிர் – ஒரு கப்
தண்ணீர் – அரை டம்ளர்
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு
உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

நறுக்கிய வாழைத்தண்டு, கட்டித்தயிர், கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவும். பிறகு இதை வடிகட்டி உப்பு சேர்த்தால் வாழைத்தண்டு மோர் தயார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சண்டே ஸ்பெஷல்: பொரித்த மீன் பிரியரா நீங்கள்… இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

கிச்சன் கீர்த்தனா : ஈஸி சிக்கன் பிரியாணி

என்னா அடி : அப்டேட் குமாரு

ஹெச்.டி. ரேவண்ணாவுக்கு 3 நாட்கள் எஸ்ஐடி காவல்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts