uநீதிமன்ற அவமதிப்பு: ஐசரி கணேஷுக்கு அபராதம்!

public

ஐசரி கணேஷ் நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததற்காக விதிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரி விஷால் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டாம் என்றும் நடிகர் சங்கத் தேர்தலை ஜூன் 23ஆம் தேதி நடத்த அனுமதியளிக்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு தொழிலதிபர் ஐசரி கணேஷ் சார்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளது.

ஐசரி கணேஷ் சார்பில் அனந்தராமன் என்பவர் நீதிபதியை தொடர்பு கொண்டு ஜூன் 22ஆம் தேதி பேசியுள்ளார். இதுதொடர்பாக இருவர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்கப்பட்டு நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து [ஐசரி கணேஷ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: விவரம்!](https://minnambalam.com/k/2019/06/25/35) என்று ஏற்கெனவே மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.

அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டாமென சங்கரதாஸ் சுவாமிகள் அணியின் பொது செயலாளர் வேட்பாளரான ஐசரி கணேஷும், அனந்தராமன் ஆகியோரும் நீதிபதியை அணுகியுள்ளனர்.

இந்த வழக்கு இன்று (ஜூலை 29) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஐசரி கணேஷ் மற்றும் அனந்தராமன் ஆகியோர் நேரில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு பதில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக மாநில சட்டப்பணிகள் ஆணைய குழு மூலமாக ரூ.10 லட்சம் பணத்தை 2 வாரங்களில் செலுத்த உத்தரவிட்டு இருவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தனர்.

**

மேலும் படிக்க

**

**[இளையராஜா பயணத்தில் மேலும் ஓர் அங்கீகாரம்!](https://minnambalam.com/k/2019/07/28/14)**

**[கர்நாடகத்தில் ஆட்சி கவிழ திமுகதான் காரணம்: முதல்வர்](https://minnambalam.com/k/2019/07/29/14)**

**[ஆட்சிக் கவிழ்ப்புக்குக் காரணம்: சித்தராமையாவுக்குச் சிக்கல்!](https://minnambalam.com/k/2019/07/28/25)**

**[அய்யா அழைத்தார், சென்றேன்: ராமதாஸ் முத்துவிழாவில் குரு மகன்](https://minnambalam.com/k/2019/07/28/40)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *