tதமிழகம்: இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா!

public

இன்று (மே 5) ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் முதன் முதலில் மார்ச் 7ஆம் தேதி, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 100 என்ற வரிசையில் அதிகரித்து வந்தது. அதன் பிறகு கடந்த மூன்று நாட்களாகப் பாதிப்பு எண்ணிக்கை 200ஆக அதிகரித்தது. நேற்று அதிகபட்சமாக 266 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு 3000த்தை கடந்தது.

இந்நிலையில் இன்று மட்டும் 12,773 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்ட நிலையில் 527 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3023 இல் இருந்து 3550 ஆக அதிகரித்துள்ளது. 30 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தொற்றிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1409ஆக இருக்கிறது. இன்று மேலும் ஒருவர் பலியாகியதால் இதுவரை கொரோனா சிகிச்சை பலனின்றி பலியானோரின் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது.

மேலும், மே 1ஆம் தேதி நிலவரப்படி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 800ஆக இருந்த நிலையில் இன்று 2,107 ஆக அதிகரித்திருக்கிறது. கோயம்பேடு சந்தையுடன் தொடர்பிலிருந்த பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த இரு மாதத்தில் அதிகபட்சமான பாதிப்பு இன்று பதிவாகியுள்ளது.

கடலூரில் 122 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161ஆக உள்ளது. சென்னையில் 266 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1724ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து விழுப்புரத்தில் 49 பேருக்கும், பெரம்பலூரில் 22 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுபோன்று மதுரை, திண்டுக்கல் என 19 மாவட்டங்களில் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

**-கவிபிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *