Tமுகிலனிடம் சென்னையில் விசாரணை!

public

சமூக செயற்பாட்டாளர் முகிலனிடம் சென்னை எழும்பூரிலுள்ள அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான ஆவணங்களை வெளியிட்டுவிட்டு பிப்ரவரி 15ஆம் தேதி இரவு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்ற சமூக செயற்பாட்டாளர் முகிலனை அதன் பிறகு காணவில்லை. இதனைத் தொடர்ந்து முகிலனைக் கண்டுபிடிக்கக் கோரி ஆட்கொணர்வு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, சிபிசிஐடி போலீசார் அவரை தீவிரமாகத் தேடிவந்தனர்.

நேற்று முகிலன் திருப்பதியில் இருப்பதாக தகவல் பரவியது. இதனையடுத்து நேற்று இரவே தமிழக போலீசார் திருப்பதி சென்று முகிலனை அங்கிருந்து காட்பாடிக்கு அழைத்து வந்து விட்டனர். அவருக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் நாய் கடித்த காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாய்க்கடிக்கு ஊசி போடப்பட்டு உள்ளது என்றும் சாப்பிடாத நிலையில் அவரது உடல் பலவீனமடைந்து காணப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சென்னை அழைத்துவரப்பட்ட முகிலனிடம் எழும்பூரிலுள்ள அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி ஐஜி சங்கர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணை முடிவில்தான் முகிலன் தானாக சென்றாரா அல்லது யாராவது கடத்திச் சென்றார்களா என்பது தெரியவரும்.

**

மேலும் படிக்க

**

**[மாசெக்கள் நம்மை மதிப்பதில்லை: முதல் கூட்டத்தில் உதய நிதியிடம் புகார்!](https://minnambalam.com/k/2019/07/07/38)**

**[டிஜிட்டல் திண்ணை: ராஜ்யசபா- ஜெயலலிதா மறுத்தவருக்கு சீட் கொடுத்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/06/82)**

**[விமர்சனம்: களவாணி 2](https://minnambalam.com/k/2019/07/07/16)**

**[பொன்னியின் செல்வன்: விக்ரம் ரியாக்‌ஷன்!](https://minnambalam.com/k/2019/07/06/71)**

**[சிறந்த தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்!](https://minnambalam.com/k/2019/07/05/39)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *