Kபோட்டிக்குத் தயாரான ஜியோனி!

public

ஸ்மார்ட் போன்களில் புதிய அம்சங்களை இணைத்துப் புதிய டிசைன்களில் பல்வேறு நிறுவனங்களும் விற்பனை செய்துவருகின்றனர். தற்போது ஃபுல் ஸ்கிரீன் வசதி கொண்ட மாடல்கள் அதிகம் விற்பனையாகின்றன. அதனால் பல்வேறு நிறுவனங்கள் அதிக திரையளவு கொண்ட மாடல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளன.

ஜியோனி நிறுவனமும் ஃபுல் ஸ்கிரீன் வசதி கொண்ட M7 பவர் என்ற புதிய மாடல் ஒன்றினை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. சுமார் 6 இஞ்ச் ஃபுல் ஸ்கிரீன் கொண்ட M7 பவர் என்ற இந்த புதிய மாடலில் 5000mAH பேட்டரி சக்தி வழங்கப்பட்டுள்ளது. 4GB RAM, 64GB internal storage வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலின் வெளியீடு நாளை (நவம்பர் 15) நடைபெறும் என ஜியோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

13MP பின்புற கேமரா மற்றும் 8MP செல்ஃபி கேமராவுடன் M7 பவர் வெளியாக உள்ளது. 1.4GHz octa-core Snapdragon ப்ராசெஸ்சர் இதில் சிறந்த கிராபிக்ஸ் பயன்பாட்டிற்காக இணைக்கப்பட்டுள்ளது. Android 7.1.1 Nougat OS மட்டுமின்றி இதில் கூடுதலாக்க Amigo OS 5.0 வழங்கப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தும் கெஸ்டர் மோஷன் வசதிக்காக இந்த கூடுதல் OS வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5000mAH பேட்டரியை விரைந்து சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.20000 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *