நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு: மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்!

Published On:

| By Selvam

நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று (மே 5) நடைபெறுகிறது.

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வு முகமை நீட் நுழைவுத் தேர்வை நடத்துகிறது.

அந்தவகையில், இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் 557 நகரங்களில் மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது. 24 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 1.52 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு எழுதும் மாணவர்கள் மதியம் 12 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அரைக்கை சட்டை அணிந்து வர வேண்டும், ஹீல்ஸ் இல்லாத செருப்புகள், ஷூக்கள் அணிந்து வர வேண்டும், பர்ஸ், கைப்பை, கைக்கடிகாரம், வளையல், மொபைல் போன்கள் போன்ற பொருட்களுக்கு அனுமதியில்லை என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நீட் யுஜி அட்மிட் கார்டு, பயோடேட்டா, உறுதிமொழி படிவம், புகைப்பட அடையாளச் சான்று உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்திய டெஸ்லா நிறுவனத்துக்கு எதிராக எலான் மஸ்க் வழக்கு… எதற்காக?

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment