பயங்கரவாதிகள் தாக்குதல்: விமானப்படை வீரர் பலி!

Published On:

| By Selvam

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய விமானப்படை வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டம் ஷாசிதார் பகுதியில் இந்திய விமானப்படை அதிகாரிகள் பயணித்த கான்வாய் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று (மே 4) தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் ஐந்து வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் உதம்பூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஐந்து வீரர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், கவலைக்கிடமாக இருந்த வீரர் உயிரிழந்தார்.

இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “ஜம்மு, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஷாசிதார் அருகே இந்திய விமானப்படையின் கான்வாய் வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு விமானப்படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

இந்த தாக்குதலில் ஐந்து விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி ஒரு விமானப்படை வீரர் உயிரிழந்தார். தொடர்ந்து அந்தப் பகுதியில் ராணுவ வீரர்கள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: எடையைக் குறைக்க நினைப்பவர்களே… இதை ஃபாலோ பண்ணுங்க!

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு: மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share