jபாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 8 பேர் பலி!

public

பாகிஸ்தானில் இன்று காலை மசூதி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

வரும் ஜூன் 5 அல்லது 6 தேதிகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. இதற்காக முஸ்லீம் சமூகத்தினர் தங்களது நோன்பு காலத்தை கடைப்பிடித்து வருகின்றனர். அதுபோன்று பாகிஸ்தானில் உள்ள தெற்காசியாவிலேயே பெரிய முஸ்லீம் வழிபாட்டுத்தலம் என்று கூறப்படும் சூஃபி மசூதியிலும் இன்று காலை தொழுகை நடைபெற்றது.

மசூதிக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் காவல் துறையினரின் வாகனம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலில் 5 போலீசார் உட்பட 8 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்துள்ள பஞ்சாப் மாகாணத்தின் காவல்துறை தலைவர் அரிஃப் நவாஸ், காவல்துறையினரை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்திருப்பதாகவும், 5 பேர் கவலைக்கிடமாக லாகூர் மேயோ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை மூத்த அதிகாரி அஷ்ஃபாக் அகமது தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் இங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் 40க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இந்த நிலையில் மீண்டும் இங்குத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

[அமமுகவில் இணைந்த கொங்கு பாமக பிரமுகர்கள்!](https://minnambalam.com/k/2019/05/08/5)

.

[தேனிக்கு திடீர் இயந்திரங்கள்: ஓ.பன்னீர் மகனை ஜெயிக்க வைக்க முயற்சியா?](https://minnambalam.com/k/2019/05/08/30)

.

[அஜித் பாடல்களுக்குத் தடை!](https://minnambalam.com/k/2019/05/06/65)

.

[டிஜிட்டல் திண்ணை: தினகரனிடம் ஏமாந்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/07/81)

.

[நீட்: கல்வி வணிகர்கள் விரிக்கும் வலை!]( https://minnambalam.com/k/2019/05/07/16)

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *