fவிலைச் சரிவு: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

public

சென்ற மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த நிலையில் இன்று தொடர்ந்து 14ஆவது நாளாகப் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரப்படி, இந்தியாவின் நான்கு முன்னணி நகரங்களில் பெட்ரோல் விலை 15 காசுகளும், டீசல் விலை 11 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் குறித்த விவரங்களை இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.58லிருந்து ரூ.76.43 ஆகக் குறைந்துள்ளது. டீசல் விலை 10 பைசா குறைக்கப்பட்டு ரூ.67.85 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மும்பையில் ஜூன் 11ஆம் தேதி பெட்ரோல் விலை ரூ.84.41 ஆகவும், டீசல் விலை ரூ.72.35 ஆகவும் இருந்தது. ஆனால் இன்று பெட்ரோல் விலை ரூ.84.26 ஆகவும், டீசல் விலை ரூ.72.24 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரையில், பெட்ரோல் விலை 79.33 ரூபாயாகவும், டீசல் விலை 71.62 ரூபாயாகவும் இருக்கிறது. கடந்த 14 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை மொத்தமாக ரூ.1.98 குறைக்கப்பட்டுள்ளது. மே 29ஆம் தேதி வரலாறு காணாத அளவில் பெட்ரோல் விலை மும்பையில் ரூ.86.24 ஆகவும், டெல்லியில் ரூ.78.43 ஆகவும் இருந்தது. இந்நிலையில் தொடர்ந்து 14ஆவது நாளாக இன்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இனி வரும் நாட்களிலும் இவற்றின் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *