eஇடைத்தேர்தல் கணிப்பு: முந்துவது யார்?

public

நடந்து முடிந்த 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 14 இடங்களைக் கைப்பற்றும் என்று இந்தியா டுடே வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

மக்களவைத் தேர்தலோடு, தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும், மே 19ஆம் தேதி 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் வாக்கு கணிப்புகள் வெளியாகி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக 30க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் தெரிவித்தன.

இந்த நிலையில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 14 இடங்களை திமுக கைப்பற்றும் என்று இந்தியா டுடே தெரிவித்துள்ளது. திமுக. 14 இடங்களையும், அதிமுக 3 இடங்களையும் பிடிக்கும். 5 தொகுதிகளில் பலத்த போட்டி இருக்கும் எனக் வாக்குக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போது அதிமுக உறுப்பினர்களில் பலம் 113ஆக உள்ளது. திமுக உறுப்பினர்களின் பலம் 97ஆக உள்ளது. ஆனால் ஆட்சியமைக்கப் பெரும்பான்மையாக 118 இடங்கள் தேவை. இந்த கருத்துக் கணிப்புகளின் படி பார்த்தால் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 111 (97+14)ஆக இருக்கும். எனினும் ஆட்சி அமைக்க மேலும் 7 இடங்கள் தேவைப்படுகிறது.

இந்த கருத்துக் கணிப்பு குறித்து இந்தியா டுடேவிடம் பேசியுள்ள திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன், ”மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்த தேர்தலுக்காக திமுக தலைவர் சிறப்பான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார். எனவே 22 தொகுதிகளையும் திமுகவே கைப்பற்றும், மே 23ஆம் தேதிக்குப் பிறகு ஆட்சியில் உடனடி மாற்றம் ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

. **

[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/21/27)

**

.

.

**

[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://minnambalam.com/k/2019/05/21/56)

**

.

**

[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://minnambalam.com/k/2019/05/21/32)

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://minnambalam.com/k/2019/05/20/16)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://minnambalam.com/k/2019/05/20/82)

**

.

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *