dநேரத்தை வீணாகச் செலவிடும் ஊழியர்கள்!

public

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் பெரும்பாலான ஊழியர்கள் மேலாண்மைப் பணிகளுக்குத் தேவையில்லாமல் அதிக நேரத்தைச் செலவிடுவதாக ஆய்வு ஒன்றின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலாளர் மேலாண்மை மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனமான *குரோனாஸ் இன்கார்பரேட்டட்*, இந்தியா, ஆஸ்திரேலியா, மெக்சிகோ, இங்கிலாந்து, கனடா, ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் அலுவலகங்களில் ஊழியர்களின் பணிச் சுமை குறித்த ஆய்வை ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 9 வரையில் மேற்கொண்டது. சுமார் 2,800 ஊழியர்களிடையே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், ‘அலுவலகங்களில் பணியாற்றும் 86 சதவிகிதம் அளவிலான ஊழியர்கள் சம்பந்தமில்லாத பணிகள் வழங்கப்படுவதால் அவர்களின் உற்பத்தித் திறன் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு இதனால் பல மணி நேரம் வீணாகிறது. இவ்வாறு சம்பந்தமில்லாத வேலைகள் கொடுக்கப்படுவதால் பத்தில் ஒன்பது பேர் (86%) தினமும் நேர விரயத்துக்கு ஆளாகின்றனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

முழு நேரப் பணியாற்றும் 41 சதவிகிதத்தினருக்கு தினமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் வீணாவதாக இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர். தங்களது அலுவலகத்தின் திறனை மேம்படுத்தாத மேலாண்மைப் பணிகள் தங்களுக்குக் கொடுக்கப்படுவதாக 40 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கும், நோயாளிகளுக்கும், மாணவர்களுக்கும் சேவை வாங்குவதில் நேரம் வீணாவதாக 56 சதவிகிதத்தினரும், உடன் பணியாற்றும் ஊழியர்களுடன் இணைந்து செயல்படுவதில் நேரம் வீணாவதாக 42 சதவிகிதத்தினரும், மேலாண்மைப் பணிகளால் பாதிக்கப்படுவதாக 35 சதவிகிதத்தினரும், மின்னஞ்சல்களுக்குப் பதிலளிப்பதால் நேரம் வீணாவதாக 31 சதவிகிதத்தினரும் தெரிவித்துள்ளனர். சந்திப்புக் கூட்டங்களாலும் (மீட்டிங்) நேரம் வீணாவதாக இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் கூறியுள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *