�உயர் நீதிமன்றம் அனுமதியளித்தும் சுடுகாட்டுக்குப் பாதையில்லை: குமுறும் கிராம மக்கள்

public

ீதி மன்றம் அனுமதியளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் சுடுகாட்டுக்கு தனிப் பாதையில்லாததால் கல்பாதூர் மக்கள் குமுறுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், திருநாவலூர் ஒன்றியத்துக்குட்பட்டது கல்பாதூர் கிராமம். இங்குப் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 500 குடும்பங்கள் வசிக்கின்றன.
இந்தக் கிராமத்தில், சுடுகாட்டுக்கு தனிப்பாதை இல்லாததால் மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக இறந்தவர்களின் உடல்களை தனியார் விளைநிலங்களைக் கடந்து, ஓடை வழியாக சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கின்றனர். மழை காலங்களில் விளைநிலங்கள் நீரில் மூழ்கி, ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு தாங்கள் மிகவும் சிரமப்படுவதாக வேதனை தெரிவிக்கிறார்கள். சுடுகாட்டுக்கு தனிப்பாதை கேட்டு மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய ஏதுவாக பாதை அமைத்துத் தர வேண்டும் என்றும், ஓடைப்பகுதியிலிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணையில், நீதிமன்றம் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலரை எதிர் மனுதாராகச் சேர்த்தது. அதையடுத்து, விசாரணைக்கு ஆஜரான வட்டார வளர்ச்சி அலுவலர், 4 லட்சம் ரூபாய் மயான மேம்பாட்டுக்கு ஒதுக்கி செலவழிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
அதேபோல, சுடுகாட்டுக்குப் பாதை அமைக்கத் தடையாக இருந்த வழக்குகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு, புதிய பாதை அமைத்து மேற்படி பணத்தைச் செலவிடுமாறு சென்ற ஆண்டு 06.10.2021ஆம் தேதி வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
அதன் பிறகு கிராம பொதுமக்கள் சார்பாக உயர் நீதிமன்ற உத்தரவு நகலுடன், பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மீண்டும் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று ஊர் பொதுமக்கள் கூறுகின்றனர்.
சமீபத்தில்ஆதிலட்சுமி என்பவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அண்மையில் பெய்த தொடர் மழையால் அங்குள்ள நீர்வரத்து வாய்க்கால்களில் அதிக அளவில் தண்ணீர் சென்றதாலும் வயல்வெளிகளில் நெற்பயிர்கள் அதிகம் நடவு செய்யப்பட்டுள்ளதால் தண்ணீரிலும் விளைநிலங்களில் உள்ள பயிர்களின் மீதும் தூக்கி சென்று அந்தப் பெண்ணின் உடலை தூக்கிச்சென்று அடக்கம் செய்தனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதிலும் அவர்களது உறவினர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *