Bஉடல் இயக்கத்தின் ஆதாரம்!

public

தினப் பெட்டகம் – 10 (25.07.2018)

முதுகு நம் உடம்பில் எவ்வளவு முக்கியம் தெரியுமா? நாம் நேராக நடப்பதற்கும், உட்கார்ந்திருப்பதற்கும், நம் பல இயக்கங்களுக்கும் முதுகு மிகவும் முக்கியம். முதுகு பற்றிய சில தகவல்கள்:

1. நம் முதுகெலும்பு மிகவும் வலிமையானது. 100 கிலோ வரை எடை தாங்கக்கூடியது.

2. முதுகில் 200க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. அவற்றில் 120 தசைகள் தண்டுவடத்தின் இயக்கத்திற்குத் துணை புரிகின்றன.

3. முதுகெலும்பு பிரச்சினைக்கு மிக முக்கியக் காரணம், வாகன விபத்துகள்.

4. கரு உருவானதிலிருந்து இரண்டு மாதங்களில் குழந்தையின் முதுகெலும்பு உருவாகத் தொடங்குகிறது.

5. அதிகமான நபர்கள் டாட்டூ குத்துவது முதுகில்தான்.

6. மிக அதிக நபர்கள் மருத்துவர்களைச் சந்திக்கும்போது சொல்லும் முக்கியமான பிரச்சினை, முதுகுவலி.

7. பெண்களைவிட அதிகமாக ஆண்களுக்குத்தான் முதுகுவலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

8. விண்வெளியிலிருந்து திரும்பும் விண்வெளி வீரர்களின் உயரம், அவர்களின் நிஜமான உயரத்தைவிட 3% அதிகமாக இருக்கும். காரணம், புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தினால், குருத்தெலும்பு விரிவடையும்.

9. பரிணாம வளர்ச்சிதான் மனிதனின் முதுகு சம்பந்தமான பிரச்சினைகளுக்குக் காரணம்.

10. நம் உடம்பில், அனைத்து இயக்கங்களுக்கும் அடிப்படையான உறுப்பு, முதுகெலும்பு.

**- ஆஸிஃபா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *