aஆல்கஹால் ஞாபக சக்தியை அதிகரிக்கும்!

public

மதுவிலுள்ள ஆல்கஹால் நினைவாற்றல் திறனை அதிகரிக்க செய்யும் என ஆய்வில் தெரிவிக்கிறது.

மது குடிப்பது உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற வாசகம் நாம் கடந்து செல்லும் சில பாதைகளில் நம்மை பின்பற்றி கொண்டிருக்கும். ஆனால், ஆய்வு ஒன்றில் மதுவில் உள்ள ஆல்கஹால் நினைவாற்றல் மற்றும் கற்றல் திறனை  அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இங்கிலாந்தில் உள்ள எக்சிடர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 18-53 வயதுள்ள 88 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 31 ஆண்கள் மற்றும் 57 பெண்கள் ஆவர். அவர்களுக்கு சொற்களை கற்கும் பணி கொடுக்கப்பட்டது. அவர்களே விரும்பி ஆர்வத்துடன் அதிக அளவு மது குடிப்பவர்கள் ஒருவகையும், மற்றொரு வகை மது குடியாதவர்கள் என்று இரண்டு வகையாக பிரித்தனர். அடுத்த நாளும், அவர்கள் மீண்டும் வார்த்தைகளை கற்றனர். இதில், மது குடியாதவர்களை விட அதிகளவு மது குடித்தவர்களுக்கே அதிக நினைவாற்றல் இருந்தது.

இரண்டாவதாக, பங்கேற்பாளர்கள் மது குடித்து முடித்த பின்பு, திரையிலுள்ள படங்களை பார்க்க சொல்லப்பட்டது. இதிலும், மது குடித்தவர்களை அதிக நினைவாற்றல் பெற்றிருந்தனர்.

இதில், இந்த விளைவுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், ஆல்கஹால் புதிய தகவல்களின்படி கற்றலை தடுக்கும். அதனால் மூளை நீண்ட கால நினைவாற்றலில் சமீபத்தில் அறியப்பட்ட தகவலை மட்டுமே வைத்திருக்கும். இந்த கோட்பாடு ஹிப்போகாம்பஸ் எனப்படும். மூளை பகுதியில் மிகவும் முக்கியமானது நினைவாற்றல். நினைவுகள் ஒருங்கிணைத்தல்” மூலம் குறுகிய கால நினைவுகளை நீண்ட கால நினைவுகளாக மாற்றும்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *