ரத்தப் பரிசோதனை: அரசாணையைத் திருத்த வலியுறுத்தல்!

public

சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட அரசாணையில் திருத்தம் செய்ய வலியுறுத்தி, சென்னையில்வரும் 14ஆம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாகச் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும்பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று (அக்டோபர் 12), இது குறித்து இந்த சங்கங்கள் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டன. அரசாணை எண் 206 மூலம்,நகர்ப்புறங்களில் உள்ள ரத்தப் பரிசோதனை நிலையங்கள் 700 முதல் 1,500 சதுர அடி பரப்பளவில் இருக்க வேண்டும் என்றும்,கிராமப்புறங்களில் 500 சதுர அடி பரப்பளவில் இருக்க வேண்டும் எனவும் கடந்த ஜூன் மாதம் தமிழக அரசு அறிவித்திருந்தது.இதனால், தமிழகத்தில் உள்ள 20,000க்கும் மேற்பட்ட சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்கள் மூடப்படும் அவல நிலைஏற்படுமென்ற அச்சம் உண்டானது. இது கார்ப்பரேட் லேப்களுக்கு சாதகமானது. ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில்மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யும் சிறிய லேப்களுக்கு எதிரானது. எனவே, இந்த அரசாணையில் திருத்தம் செய்து நகர்ப்புறலேப்களுக்கு 150 சதுர அடி இடவசதியும், கிராமப்புற லேப்களுக்கு 100 சதுர அடி இடவசதியும் இருந்தால் போதும் என்றுதிருத்தம் செய்ய வேண்டும்.

அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் பயின்ற 50,000க்கும் மேற்பட்ட லேப் டெக்னீசியன்களை தொடர்ந்து சேவை செய்யக்கூடாது என்பதை நீக்கி, இவர்கள் தொடர்ந்து சேவை செய்ய அனுமதிக்க வேண்டும். லேப்களை பதிவு செய்வதற்கான கட்டணத்தைரூ.5,000 என்பதை ரூ.1,000மாக குறைக்க வேண்டும்.

மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கான கட்டணத்தை மாதம்தோறும் ரூ.500 என நிர்ணயிக்க வேண்டும். மருத்துவ நிறுவனங்கள்முறைப்படுத்தும் சட்டத்தை அமல்படுத்தும் ஆலோசனைக் குழுவில் லேப் டெக்னீசியன்கள் சங்கப் பிரதிநிதியையும் இணைக்கவேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 14ஆம் தேதியன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் காலை10.00 மணி முதல் மாலை 3.30 வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *