}முழு சூரிய கிரகணத்தைப் பார்த்த அமெரிக்கர்கள்!

public

99 ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த சூரிய கிரகணத்தை அமெரிக்காவின் பல பகுதிகளில் மக்கள் தொலைநோக்கியின் மூலம் பார்த்து மகிழ்ந்தனர்.

சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் கடந்து செல்லும் போது சூரியன் முற்றிலுமாக மறைக்கப்படுவதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதன்படி, அமெரிக்காவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது. இந்த நிகழ்வு நடைபெறும் போது ஒரு நிமிடம், 36 விநாடிகளுக்கு பூமியில் இருள் சூழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும், இந்த சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் என நாசா தெரிவித்திருந்தது. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள 14 மாகாணங்களில் கிரகணக்காட்சி முழுமையாகத் தெரிந்தது. எனினும், தெற்கு கரோலினா மாகாணம் உள்ளிட்ட சில மாகாணங்களில் மேக மூட்டம் ஏற்பட்டதால் முழுமையாகத் தெரியவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய நேரப்படி நேற்று (ஆகஸ்ட் 21) இரவு முதல் இன்று (ஆகஸ்ட் 22) அதிகாலை வரை கிரகணம் நிகழ்ந்தது. இதை, பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தொலைநோக்கிகள் மூலம் மக்கள் பார்த்து மகிழ்ந்தனர். ஆனால், தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியவில்லை.

இருப்பினும், நாசா இணையதளத்தில் வெளியான கிரகணக் காட்சிகள் நேரலையாக பல இடங்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அடுத்த முழுமையான சூரிய கிரகணம் 2019ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி ஏற்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *