தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா தொகுதிகள் மாற்றம்

public

தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா கூட்டணி தொகுதி உடன்பாடு செய்யப்பட்டு தொகுதி ஒதுக்கீடும் முடிந்துவிட்டது. இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளிடையே சில தொகுதிகள் மாற்றிக்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த், கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோரின் ஒப்புதலுடன் கீழ்கண்ட தொகுதிகள் மாற்றிக்கொள்ளப்பட்டன. முதுகுளத்தூர், தேமுதிக-விடம் இருந்து மதிமுக-வுக்கும்; மன்னார்குடி, மதிமுக-விடமிருந்து தேமுதிக-வுக்கும்; கள்ளக்குறிச்சி, தேமுதிக-விடமிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும்;

திண்டிவனம், விசிக-விடமிருந்து தேமுதிக-வுக்கும் மாற்றப்பட்டுள்ளது’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *