தமிழகத்தின் நகர்புறம்: அதிகரிக்கும் புற்றுநோய்!

public

தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த சர்வதேச மக்கள் அறிவியல் அமைப்பை சேர்ந்த நிபுணர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வில், 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கும். குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் ,பீகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களின் கிராமப்புறங்களில் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும். அதுபோன்று, தமிழ்நாட்டின் நகர்புறங்களிலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை 1.6 மில்லியனாக இருக்கும். இது 2025 ஆம் ஆண்டில் 1.8 மில்லியனாக அதிகரிக்கும். 2015 ஆம் ஆண்டில் 4,27,880 ஆக இருந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 6,37,762 ஆக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் கிராமப்புறங்களில் 2015 ஆம் ஆண்டில் 9,45,005 ஆக இருந்த புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 11,58,213 ஆக அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக, 2015 ஆம் ஆண்டில் 13,72,885 ஆக இருந்த எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 17,95,975 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில், உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தின் கிராமப்புறங்களில் புற்றுநோயின் பாதிப்பு அதிகரிக்கும். உத்தரப் பிரதேச நகர்புறங்களில் பெண்களை விட ஆண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். லட்சத்தீவு, டாமன், டையூ மற்றும் சிக்கிம் மாநிலங்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் புற்றுநோய் பாதிப்பு குறைந்த அளவில் உள்ளது.

ஆண்களுக்கு புகையிலையினால் ஏற்படும் புற்றுநோயும், பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் அதிகளவில் ஏற்படுகின்றன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *