?தடம் பதித்த அருண் விஜய்

public

குற்றம் 23 திரைப்படத்தை தயாரித்த ரெதான் -தி சினிமா பீப்பிள் நிறுவனத்தின் சார்பில் இந்தர் குமார் தயாரிப்பில் வெள்ளிக்கிழமை 310 திரைகளில் வெளியான படம் தடம்.

இந்தப் படத்தில் அருண் விஜய் எழில், கவின் என்று இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். மேலும், தன்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மகிழ் திருமேனி திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஏழு நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியானாலும் அதிகமான தியேட்டர்களை வணிக ரீதியாக ஆக்கிரமித்த படங்கள் தடம், சேரனின் திருமணம், ஓவியா நடித்துள்ள 90 எம்எல் மட்டுமே.

அருண் விஜய் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான குற்றம் 23 படம் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படமாகும். அதன் பின் அருண் விஜய் 2018ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான செக்கச் சிவந்த வானம் படத்தில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார். அப்படமும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனால் தடம் படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதன் காரணமாக அதிக திரையரங்குகளில் திரையிடப்பட்டது.

எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் வசூல் ரீதியாக தடம் முதல் மூன்று நாட்களில் 6 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. முதல் நாள் ரூபாய் 1,34,76,895 இரண்டாம் நாள் ரூபாய் 1,86, 12,732, மூன்றாம் நாள் ரூபாய் 2,44, 53,089 என தமிழகத்தில் தடம் வசூல் செய்துள்ளதாக விநியோகஸ்தர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.

பள்ளி இறுதி தேர்வுக் காலம், கடுமையான கோடை வெயிலையும் கடந்து முதல் மூன்று நாட்களில் சுமார் 6 கோடி ரூபாய் வசூல் என்பது பிரமிப்பானது என்கின்றனர் தியேட்டர் வட்டாரத்தில்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *