காந்தி இன்றும் தேவைப்படுகிறார்: ராம்நாத் கோவிந்த்

public

நாட்டின் 73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மாலை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர், மகாத்மா காந்தியின் பார்வையும் நோக்கமும் இன்றைய இந்தியாவின் தேவையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

தன் உரையில் அவர், “சுதந்திர இந்தியாவில் 72 ஆண்டுகளை நாம் பூர்த்தி செய்திருக்கிறோம். இன்னும் சில வாரங்களில் அக்டோபர் 2ஆம் தேதி நாம் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழாவைக் கொண்டாடவிருக்கிறோம். இன்றைய நிலையிலும் காந்தி நமக்கு தேவையாக இருக்கிறார். அவரது கொள்கைகளும் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையும் இப்போதும் நமக்குத் தேவைப்படுகின்றன” என்று கூறினார்.

“தேசம் என்பது குடிமக்கள் மற்றும் அரசாங்கம் இருவரும் இணைந்து கட்டி எழுப்புவதாக இருக்க வேண்டும்” என்று கூறிய ராம்நாத் கோவிந்த், “இந்தியாவின் எதிர்காலமாக இருக்கக்கூடிய மாணவர்களை வகுப்பறைகளில் நம் கலாச்சாரத்தை போதித்து உற்சாகப்படுத்த வேண்டும். அதன் மூலமே வருங்காலத் தலைமுறையினருக்கும் நாம் சிறந்த பரிசை வழங்க முடியும்” என்றும் கூறியுள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்திடம் மன்னிப்பு கேட்ட எடப்பாடி- கோபப்பட்ட பன்னீர்!](https://minnambalam.com/k/2019/08/14/75)**

**[நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!](https://minnambalam.com/k/2019/08/14/18)**

**[வேலூர் ரிசல்ட்: அதிமுக – பாஜக மோதல்!](https://minnambalam.com/k/2019/08/14/21)**

**[எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!](https://minnambalam.com/k/2019/08/14/5)**

**[அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!](https://minnambalam.com/k/2019/08/14/16)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *