]ஐ.பி.எல். 2017: பலம் பெறுமா பஞ்சாப் அணி?

public

ஐ.பி.எல். தொடங்கியது முதல் அதிகம் மாற்றம் செய்யப்பட்ட ஓர் அணி பஞ்சாப். அதிர்ஷ்டம்னு ஒண்ணு இருந்தா, இந்த டீம் நிச்சயம் ஜெயிக்கும் என்றுதான் எப்போதும் இந்த அணியின் நிலை இருக்கும். ஒரு சீசன்ல ஃபர்ஸ்ட் ஆஃப் ரொம்ப சிரமப்பட்டு அணியைப் புதுசு புதுசா மாத்தி ஒருவிதமா செட் பண்ணி, அப்பாடா டீம் ரெடினு நினைக்கும்போது செகண்ட் ஆஃப்ல யாராவது காயம் காரணமா விலகிடுவாங்க. ரொம்ப நல்ல ஃபாரின் பிளேயர் எல்லாம் இந்த டீம்லதான் இருந்தாங்க. ஆனா, அதுக்கும் ஒரு செக் வெச்சு, நாலு ஃபாரின் பிளேயர் மட்டும்தான் டீம்ல இருக்கணும்னு சட்டம் வேற போட்டிருக்காங்க.

ப்ரீத்தி ஜிந்தாவை பார்க்கத்தான் பாவமா இருக்கு. அவங்க ரசிகர் கூட்டம் பாதி அந்த டீமுக்கு இன்னும் சப்போர்ட் பண்ணுது. இத்தனை வருஷமா காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் எதிர்பார்த்த ஓர் அணி இந்த ஐ.பி.எல். தொடரில் ஃபாம் ஆகிருக்கு என்றுதான் சொல்லணும். அதற்கான காரணத்தைத்தான் இப்போ பார்க்கலாம்.

இதுவரை புதுமுக வீரர்களை அதிகமாக கொண்டும், அதேபோல் அந்த மாநில சிறந்த வீரர்களை மட்டுமே அதிகம் பயன்படுத்தியும் இந்த அணி விளையாடி வந்துள்ளது. அதனால் பேட்டிங் வரிசை சிறப்பாக இருந்தாலும், பந்து வீச்சில் சொதப்பி போட்டியில் தோல்வியடையும். அப்படி இல்லை எனில் பேட்டிங் வரிசையில் ஏற்படும் தவறுகாளாலும் சில போட்டிகளில் வெற்றி வாய்ப்பைத் தவறவிடும். இதனை கண்டறிந்த புதிய அணி தலைவர், இந்திய வீரர் சேவாக் இந்த முறை ஏலத்தில் சிறப்பான வீரர்களை சரியான நேரத்தில் ஏலம் எடுத்து அணியின் நிலையை வலுப்படுத்தியுள்ளார்.

இந்தமுறை தமிழக வீரர் நடராஜன், இங்கிலாந்து அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான கேப்டன் மோர்கன், வெஸ்ட் இண்டீஸ் அணியின் டேரன் சமி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளது மிக சிறப்பு. சேவாக் கடந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்தவர் என்பதனால் அணியின் நிறைகுறைகளை அறிந்தவர். எனவே, இந்த முறை நிச்சயம் பஞ்சாப் அணி வலுபெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலும் தற்போது அணி வலுபெற்றுள்ளது என்றாலும், 11 நபர்களின் பங்களிப்பும் சிறப்பாக இருக்கும் எனில் இந்தமுறை மற்ற அணிகளுக்கு கடும் போட்டியாக பஞ்சாப் அணி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *