vஎனை நோக்கி பாயும் தோட்டா: லேட்டஸ்ட் அப்டேட்!

public

கெளதம் மேனன் – தனுஷ் கூட்டணியில் உருவாகிவரும் எனை நோக்கி பாயும் தோட்டா படம் வரும் காதலர் தினத்தன்று வெளிவர இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. பின்னர் கெளதம் மேனன் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பிலும், தனுஷ் வடசென்னை படப்பிடிப்பிலும் பிஸியாகிவிட்டனர். இந்நிலையில் விக்ரமை வைத்து கெளதம் மேனன் தற்போது இயக்கிவரும் துருவ நட்சத்திரம் படம் இறுதிக் கட்டத்திற்கு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் மீதமுள்ள காட்சிகளைப் படமாக்கக் கெளதம் முடிவு செய்திருந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 12) தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பிரபல ஸ்டூடியோவில் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. டிசம்பருக்குள் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டிருக்கும் கெளதம் மேனன் படத்தை வரும் பிப்ரவரியில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

காதல், ஆக்‌ஷன் கலந்த திரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பாகுபலி ராணா, சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். கெளதம் மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்டும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதனும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *