]அனைவருக்குமான அடிப்படை வருமானம் – 8

public

ஒரு பொருளுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது அல்லது அப்பொருளைப் பெறுவது மிகவும் கடினம் என்றால், அதன் விலை உயரும். இந்த விதி பணத்துக்கும் பொருந்தும். குறைவான வருமானம் பெறும் குடும்பங்களிடம் அதிக பணம் இருக்காது. அதனால் அவர்களால் பெரியளவில் சேமிக்க முடியாது. அவர்கள் தங்களுடைய அன்றாட செலவுகள், எதிர்பாராத செலவுகளுக்கே பிறரிடம் அதிக வட்டிக்குக் கடன் வாங்க வேண்டியிருக்கும் (வட்டி என்பது வாங்கும் கடனுக்கு நாம் கொடுக்கும் விலை).

அந்தக் கடன் தொகையைப் பெற ஏதேனும் ஒரு சொத்தை அடமானம் அல்லது துணைப் பிணையமாக (collateral) வைக்க வேண்டியிருக்கும். பின், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதில் வருமானத்தில் ஒரு பகுதி கழிந்துவிடும். இதனால், அக்குடும்பங்கள் பெறும் குறைவான வருமானத்தில் நீண்ட காலத்துக்கெனப் பெரிதாக எதுவும் சேமித்துவிட முடியாது. இது ஒரு முடிவில்லா வட்டம் என்பதை நாம் பார்க்க முடிகிறது.

இத்தகைய சூழலில், ஒரு கிராமத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடுதல் தொகையாக அடிப்படை வருமானம் ஒன்றைக் கொடுத்தால், ஒவ்வொரு குடும்பத்திடமும் முன்பு இருந்ததைவிட அதிக பணம் இருக்கும். இதனால், அவர்கள் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்க முடியும். திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகையின் அளவும் குறைவதால், கையில் அதிகமாகப் பணம் மிஞ்சும்; அந்தப் பணத்தைச் சேமிக்கலாம் அல்லது ஏதேனும் உற்பத்திக்கருவி வாங்குவதற்குப் பயன்படுத்தலாம். மேலும், ஒரு குடும்பம் ஏதேனும் பணம் சார்ந்த நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டால், அந்தக் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, சிறு சிறு பங்களிப்புகளின்மூலம் கணிசமான தொகை ஒன்றைத் திரட்டி அக்குடும்பத்துக்கு உதவ முடியும்.

2010-2013 காலத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒன்பது கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு வாழும் 6,000 நபர்களுக்கும் பரீட்சார்த்த முறையில் அடிப்படை வருமானம் வழங்கப்பட்டது. அதேபோல் மேலும் சில கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன; ஆனால், அங்கு வாழும் மக்களுக்கு அடிப்படை வருமானம் வழங்கப்படவில்லை. காரணம், அந்தத் தொகையைப் பெற்றவர்களின் செயற்பாட்டையும், தொகையைப் பெறாதவர்களின் செயற்பாட்டையும் ஒப்பிட்டு, கூடுதல் வருமானம் பெற்றவர்களால் அதைப் பயனுள்ள வகையில் செலவு செய்ய முடிகிறதா என்பதைக் கண்காணிப்பதே இந்தச் சோதனை முயற்சியின் நோக்கம்.

கடன் வாங்கிய குடும்பங்களால் கடனைத் திருப்பி செலுத்த முடியாத பட்சத்தில் நிலப்பிரபுக்களும், கந்துவட்டிக்காரர்களும் அவர்களைத் தங்களுக்கு அடிமைகளாக வேலை செய்ய வைத்து கடனைக் கழித்துக்கொள்ளும் போக்கு இந்தக் கிராமங்களில் காணப்பட்டது. அடுத்தவர் நிலத்தில் வேலை செய்வதால், சிறு குறு விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் வேலை செய்ய முடியாமல் போனது. ஆனால், அடிப்படை வருமானம் பெற்ற சில குடும்பங்களால் இந்த அடிமைச்சங்கிலியை உடைத்து ஓரளவுக்குச் சுதந்திரமாகச் செயல்பட முடிந்தது.

அடிப்படை வருமானத் தொகையைப் பெற்ற குடும்பங்கள், தங்கள் கடனைக் குறைத்ததோடு, அதிகமாகச் சேமிக்கவும் தொடங்கின. கடன் இருந்தபோதும், சேமிப்பது அவசியம் எனக்கருதி, கிடைத்த கூடுதல் வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமித்தன.

அடிப்படை வருமானத்தால் சில கிராமங்களில் முற்போக்கான திசையில் சமூக-கலாச்சார மாற்றங்களும் ஏற்படத் தொடங்கியதாக இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த சோதனை முயற்சி தொடங்கியபோது, இளம்பெண்கள் அனைவரும் தங்கள் முகங்களைத் துணியால் மறைத்துக்கொண்டுதான் அடிப்படை வருமானத்தைப் பெறுவதற்கான படிவங்களை நிரப்பினர்; அவர்களைப் புகைப்படம் எடுப்பதும் பெரும் சவாலாகவே இருந்தது.

ஆனால், கையில் பணம் கிடைக்கத் தொடங்கியதும், அவர்களுக்குப் பொருளாதார சுதந்திரம் என்றால் என்ன என்பது புரியத் தொடங்கியது; அவர்களுடைய வாழ்க்கை குறித்த முடிவுகளை அவர்களே எடுக்கத் தொடங்கினர். அடுத்த முறை ஆய்வாளர்கள் அந்தக் கிராமங்களுக்குச் சென்றபோது, இளம்பெண்கள் தங்களுடைய முகங்களை மூடாமல் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காண முடிந்தது.

[அனைவருக்குமான அடிப்படை வருமானம் – 1](https://minnambalam.com/k/2019/05/01/83)

[அனைவருக்குமான அடிப்படை வருமானம் – 2](https://minnambalam.com/k/2019/05/04/56)

[அனைவருக்குமான அடிப்படை வருமானம் – 3](https://minnambalam.com/k/2019/05/05/33)

[அனைவருக்குமான அடிப்படை வருமானம் – 4](https://minnambalam.com/k/2019/05/06/5)

[அனைவருக்குமான அடிப்படை வருமானம் – 5](https://minnambalam.com/k/2019/05/07/18)

[அனைவருக்குமான அடிப்படை வருமானம் – 6](https://minnambalam.com/k/2019/05/08/18)

[அனைவருக்குமான அடிப்படை வருமானம் – 7](https://www.minnambalam.com/k/2019/05/09/15)

**

மேலும் படிக்க

**

.

[ டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்திடம் பிரேமலதா பற்றி புகார் சொன்ன நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/11/55)

.

[ மோடி அரசைக் கலைக்க நினைத்த வாஜ்பாய்: யஷ்வந்த்](https://minnambalam.com/k/2019/05/11/24)

.

[ ஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது? என்ன நடக்கிறது? முழு ரிப்போர்ட்!](https://minnambalam.com/k/2019/05/10/74)

.

.

[ திலகவதி கொலை: ராமதாஸுக்கு திருமாவளவன் பதில்!](https://minnambalam.com/k/2019/05/11/35)

.

[ இப்படியும் சில ரவுடிகள்! -தேனி அதிர்ச்சி!](https://minnambalam.com/k/2019/05/11/31)

.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *