மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 11 ஆக 2020

மோடி அரசைக் கலைக்க நினைத்த வாஜ்பாய்: யஷ்வந்த்

மோடி அரசைக் கலைக்க நினைத்த வாஜ்பாய்: யஷ்வந்த்

கோத்ரா கலவரத்தைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டில் குஜராத் முதலமைச்சர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை நீக்குவதற்கு அப்போதைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் முயன்றதாகவும், அவரை அத்வானி தடுத்து நிறுத்தியதாகவும் முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

நேற்று (மே 10) மகாராஷ்டிர மாநிலம் போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய யஷ்வந்த் சின்ஹா, “குஜராத்தில் நடைபெற்ற மதக் கலவரங்களைத் தொடர்ந்து அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பதவி விலக வேண்டுமென்று அடல் பிகாரி வாஜ்பாய் முடிவெடுத்தார். 2002ஆம் ஆண்டில் கோவாவில் நடைபெற்ற பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு செல்லும்போது, மோடி குஜராத் முதல்வர் பொறுப்பிலிருந்து பதவி விலக மறுத்தால் குஜராத் அரசைக் கலைக்க வேண்டும் என்று வாஜ்பாய் திட்டமிட்டிருந்தார்.

இது குறித்து கட்சிக்குள் ஒரு கூட்டமும் நடைபெற்றது. மோடி தலைமையிலான குஜராத் அரசைக் கலைக்க அத்வானி எதிர்ப்பு தெரிவித்தார். நரேந்திர மோடி தலைமையிலான அரசு கலைக்கப்பட்டால் தானும் பதவி விலகுவதாக அத்வானி தெரிவித்தார். இதனால் வாஜ்பாய் தனது முடிவை மாற்றிக்கொண்டார். நரேந்திர மோடியும் குஜராத் முதல்வராகப் பதவியில் தொடர்ந்தார்” என்று தெரிவித்தார். ஐ.என்.எஸ் விராட் போர்க்கப்பலை முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சுற்றுலா செல்லப் பயன்படுத்தியதாக மோடி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த யஷ்வந்த் சின்ஹா, “இதெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. இவ்விவகாரம் தொடர்பாக முன்னாள் கடற்படை அதிகாரிகள் ஏற்கெனவே விளக்கமளித்துவிட்டனர். பிரதமராக இருப்பவர் இதுபோலப் பொய்களைப் பேசக் கூடாது. தன்னுடைய அரசின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமே தவிர நாட்டின் வரலாற்றைக் கொண்டு போட்டியிடக் கூடாது” என்று தெரிவித்தார்.

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் அழுத்தம்; பொருளாளர் பதவியை இழக்கிறார் துரைமுருகன்?

.

ஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது? என்ன நடக்கிறது? முழு ரிப்போர்ட்!

.

அமமுக சின்னத்தை அழித்தால் ரூ.1 லட்சம்: அமைச்சர்!

.

கோவைத் தென்றல் ஓய்ந்தது!

.

.

சசிகலாவுக்குத் தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி

.

சனி, 11 மே 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon