மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 மே 2019

திலகவதி கொலை: ராமதாஸுக்கு திருமாவளவன் பதில்!

திலகவதி கொலை: ராமதாஸுக்கு திருமாவளவன் பதில்!

மாணவி திலகவதி படுகொலை தொடர்பாக விசிகவை குற்றம்சாட்டிய பாமக நிறுவனர் ராமதாஸுக்கு திருமாவளவன் பதிலளித்துள்ளார்.

கடந்த மே 8 ஆம் தேதி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி கிராமத்தில் திலகவதி என்ற மாணவி கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆகாஷ் என்ற 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்த சம்பவத்தில் விசிகவை தொடர்புபடுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இதுதொடர்பாக சிதம்பரத்தில் நேற்று (மே 10) செய்தியாளர்களிடம் பேசும்போது பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன், “மாணவி திலகவதி படுகொலை செய்யப்பட்டதை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த சம்பவத்தோடு விசிகவை தொடர்புபடுத்தி எந்தவித ஆதாரமும் இல்லாமல் ராமதாஸ் அறிக்கை விட்டிருப்பது வேதனையளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதை விட, இதனை அரசியல்படுத்தி ஆதாயம் தேடுவதில்தான் அவர் குறியாக இருக்கிறார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆகாஷோ அவரது குடும்பத்தினரோ விசிகவை சார்ந்தவர்கள் அல்ல. அதற்கும் விசிகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

“ஆகாஷ் கொலை செய்யவில்லை என்றும், திலகவதியின் அக்கா கணவர் அவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொள்ள விரும்பியதாகவும், அதன் காரணமாக கூட கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று ஆகாஷின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்” என்று தெரிவித்தவர், இந்த விவகாரத்தில் விசிகவை தொடர்புபடுத்துவதில் நியாயமில்லை. இனி விசிக மீது ராமதாஸ் அபாண்டமாக பழிசுமத்திக் கொண்டிருந்தால், அவர் மீது உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்றும் குறிப்பிட்டார். திலகவதி கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், படுகொலை தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியும் வரும் 16ஆம் தேதி விசிக சார்பாக விருத்தாச்சலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தனது மகளை கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திலகவதியின் பெற்றோர் மற்றும் பாமகவினர் இன்று (மே 11) கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திலகவதியின் தாயார், “என் மகளின் கொலையே கடைசியாக இருக்க வேண்டும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். என் மகளை கொலை செய்தவனுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்” என்று வேதனையுடன் கூறினார்.

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் அழுத்தம்; பொருளாளர் பதவியை இழக்கிறார் துரைமுருகன்?

.

ஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது? என்ன நடக்கிறது? முழு ரிப்போர்ட்!

.

.

அமமுக சின்னத்தை அழித்தால் ரூ.1 லட்சம்: அமைச்சர்!

.

சசிகலாவுக்குத் தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி

.

தேனி விவகாரம்: பன்னீர் பதில்!

.

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

சனி 11 மே 2019