மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 11 மே 2019

இப்படியும் சில ரவுடிகள்! -தேனி அதிர்ச்சி!

இப்படியும் சில ரவுடிகள்! -தேனி அதிர்ச்சி!

தேனி மாவட்டம் போடி தாலுக்கா காவல்நிலையம் எல்லைக்குட்பட்ட பொட்டலம் கலம் பகுதியில் நேற்று மே 10 ஆம் தேதி மாலையில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஏ.கே.47, ரிவால்வர், எஸ்.பி.பி.எல், ஏர் கன் போன்ற ஆறு துப்பாக்கிகள், ஆறு கத்திகள், நான்கு அரிவாள்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ய தென் மாவட்டங்கள் முழுதும் அதிர்ந்தன.

என்ன நடந்தது, இவர்கள் யார் தீவிரவாதிகளா? பல கேள்விகளோடு தேனி மாவட்டத்தில் விசாரணையில் இறங்கினோம்.

போடி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல கலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு மர்மக் கும்பல் ஒன்று வருவதும் போவதுமாக இருந்துவருகிறது என்ற தகவலை ரவுடிகள் தடுப்புப் பிரிவு போலீஸார் உயர் அதிகாரிக்கு அனுப்பினார்கள்.

இதன் அடிப்படையில், போடி தாலுக்கா காவல் ஆய்வாளர் வெங்கட சாலபதி, எஸ்.பி.சி.டி, எஸ்.பி. தனிப்பிரிவு போலீஸார் குறிப்பிட்ட வீட்டையும் அந்த வீதியையும் பல நாட்களாக கண்காணித்து வந்தார்கள்.

நேற்று மாலை ஒருவர் அந்த வீட்டுக்குள் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்ததும், இன்ஸ்பெக்டர் வெங்கடசாலபதி தலைமையில் ஒரு டீம் சென்று அந்த வீட்டுக் கதவைத் தட்டியது. உள்ளேயிருந்த ஒருவர் வந்து கதவைத் திறந்தார்.

உடனே போலீஸ் டீம் உள்ளே சென்று சூழ்நிலையைப் பார்த்து ஒரு ஆள்தான் இருக்கிறார் என்று மேல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துவிட்டு வீடு முழுவதும் சோதனையில் இறங்கினார்கள். அதற்குள் எஸ்.பி.சி.ஐ.டி, க்யூ போலீஸார் வீட்டு வெளியில் ரவுண்டு கட்டி நின்றுவிட்டார்கள்.

ஒவ்வொரு அறையாகச் சோதனைகள் செய்தபோது துப்பாக்கிகளைப் பார்த்துவிட்ட ஒரு காவலர் குரல் கொடுத்ததும், அனைவர் கவனமும் அந்த அறையை நோக்கிப் போனது.

உள்ளேயிருந்து விதவிதமான துப்பாக்கிகள், கத்திகள், வீச்சரிவாள்கள் எடுத்தார்கள். உடனே ஆயுதங்களைப்பற்றித் தெரிந்தவர்களை அழைத்து சோதனை செய்தபோதுதான் அதிர்ச்சியானது காவல்துறையினருக்கு. ஆம் அத்தனை துப்பாக்கிகளும் டூப்ளிகேட்.

ஒரு ஏன் கன் தவிர ஏ.கே.47 உட்பட ஐந்து துப்பாக்கிகளும் டம்மி துப்பாக்கிகள். மரக்கட்டையால் செய்து பெயின்ட் அடித்து வைத்துள்ளார்கள். இன்னொரு அறையில் கோயில் கலசம் மூன்று இருந்ததையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

அந்த வீட்டில் இருந்தவர் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் கௌரி மோகன்தாஸ். அவரிடம் இன்ஸ்பெக்டர் விசாரித்தார்.

“சார் நீங்கள் நினைப்பதுபோல் நான் பெரிய ரவுடியோ தீவிரவாதியோ இல்லை. இதெல்லாம் பொம்மை துப்பாக்கிகள். கோயில் கலசத்தில் இருடியம் இருக்கிறது என்று சொல்லி விற்று வருகிறோம். அதை வாங்க அணுகிறவர்களிடம் பணத்தோடு வரச்சொல்வோம். அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்துவதற்காக, நாங்களே போலீஸ் கெட்ட்டபில் ஆட்களை செட் பண்ணி வைத்திருப்போம்.

கோயில் கலசத்தில் உள்ள இருடியத்தை வாங்க பணத்தோடு வருவார்கள். எங்கள் ஆட்கள் போலீஸ் கெட்டப்பில் சினிமாவில் வருவதுபோல் நவீன ரகத் துப்பாக்கிகளைத் தூக்கிட்டு அதிரடியாக ஓடிவந்து சுற்றி வளைப்பார்கள். அந்த நேரத்தில் பணத்தோடு வந்தவர்களிடம் பணத்தை மட்டும் பிடுங்கிவிட்டு பிழைப்பு நடத்துவோம்” என்று பம்மியுள்ளார் டம்மி.

இவர் மீது துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்குப் போடமுடியாது,வீச்சரிவாள், கத்தி வைத்திருந்ததால் கொடூரமான ஆயுதங்கள் வைத்திருந்ததாக வழக்குப் போட்டுள்ள காவல்துறையினர் வேறு யாரிடமும் இதுபோல வழிப்பறி செய்துள்ளார்களா என்று விசாரித்து வருகிறார்கள்.

நாட்டில் இதுபோன்ற டம்மி ரவுடிகள் பொம்மைத் துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்திவருவது இன்னும் எங்கெல்லாம் நடக்கிறதோ?

-எம்.பி.காசி

.

.

மேலும் படிக்க

.

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் அழுத்தம்; பொருளாளர் பதவியை இழக்கிறார் துரைமுருகன்?

.

ஆகாஷ்- திலகவதி: என்ன நடந்தது? என்ன நடக்கிறது? முழு ரிப்போர்ட்!

.

.

அமமுக சின்னத்தை அழித்தால் ரூ.1 லட்சம்: அமைச்சர்!

.

சசிகலாவுக்குத் தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி

.

தேனி விவகாரம்: பன்னீர் பதில்!

.

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

5 நிமிட வாசிப்பு

ஊக்கத்தொகையும், பாராட்டும் வேண்டாம் : காவலர்களின் குமுறல்!

விழுப்புரத்தில் சாதி மோதலா? நடந்தது என்ன?

9 நிமிட வாசிப்பு

விழுப்புரத்தில்  சாதி மோதலா? நடந்தது என்ன?

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

4 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் 82% அதிகரித்த கொரோனா பாதிப்பு!

சனி 11 மே 2019