டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல்: கே.என்.நேரு

politics

j

டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, ”தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பாதாளச் சாக்கடைத் திட்டம் கடந்த ஆட்சியில் முடிக்கப்படாமல் இருந்தது. தற்போது அந்த பணி மீண்டும் தொடங்கப்பட்டு, அதனை விரைவாக முடிக்கும் பொருட்டு பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது” என்றார்.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து அவர் பேசுகையில், “உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்தவேண்டும் என்று முதல்வர் கூறியுள்ளார். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல சில நகராட்சிகள், மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படவுள்ளன. பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த அறிவிப்புகளைத் தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்” என்றார்.

**-பிரியா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *