வேலைவாய்ப்பு, பட்டதாரிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன்!

politics

பொறியியல் பட்டதாரிகளுக்கு தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும்,

179. குடும்பத்தில் முதல் தலைமுறைப் பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

180. கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எதிர்க் கட்சியில் இருக்கும்போதே தனது தொகுதியான கொளத்தூரில் “”அனிதா அச்சீவர்ஸ் அகாடமி” மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

கழகத் தலைவர் கொளத்தூரில் அறிவித்து நிறைவேற்றியுள்ள படி கழக ஆட்சியில் படித்து விட்டு வேலை தேடும் பெண்களுக்குப் பணி வாய்ப்பைப் பெறுவதற்கு உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குவதற்கும், அவர்கள் வேலை பெறுவதற்கும் உதவிடும் வகையில் மாவட்டந்தோறும் பயிற்சி நிலையங்கள் உருவாக்கப்படும்.

181. பள்ளிக் கல்வித் துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரைப் பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

182. தமிழகத்தில் உள்ள மாவட்ட நூலகங்கள் அனைத்தையும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நூலகங்களில் உள்ள அனைத்து புத்தகங்களின் விவரங்களையும் மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் இணைய தளத்தில் பதிவேற்றப்படும். கழக ஆட்சியில் கிராமப் பகுதிகளில் அமைக்கப்பட்ட நூலகங்கள் தற்போது பராமரிப்பும் பயன்பாடும் இன்றி இருக்கும் நிலை மாற அவை அனைத்தும் புனரமைப்பு செய்யப்பட்டு புதிதாக நூல்களும் செய்தித்தாள்களும் வழங்கப்படும்.

183. தமிழ்த் தொண்டாற்றிய செந்நாப் புலவர் கார்மேகக் கோனார், தமிழவேள் உமா மகேசுவரனார், நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர் ஆகியோர் பெயர்களில் அவர்கள் பிறந்த ஊர்களில் நூலகங்கள் அமைக்கப்படும்.

184. பட்டுக்கோட்டையில் அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி பெயரில் தன்மானத் தளபதி அழகிரி நினைவுமண்டபம் அமைக்கப்படும்.

**வேலை வாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி**

185. தமிழகத்தைக் கடந்த 10 ஆண்டுகளாக ஆளுகின்ற அதிமுக அரசின் தொலை நோக்குச் சிந்தனையில்லாமை மற்றும் நிர்வாகத் திறன் இல்லாமையால் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. தற்போதுள்ள 3000க்கும் மேற்பட்ட தொழில் பயிற்சி நிறுவனங்கள், பொறியியல் பட்டய மற்றும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஆண்டு தோறும் சுமார் எட்டு இலட்சம் மாணவ மாணவியர் தேர்ச்சிபெற்று வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றனர்.

மேலும், சுமார் இரண்டு இலட்சம் மாணவ மாணவியர் பல்வேறு கல்வி நிலையில் தேர்ச்சி பெறுவதில்லை. ஆகவே, கலைஞர் வழியில் அமையவிருக்கின்ற கழக அரசு தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தினைக் கருத்தில் கொண்டு 2020-2021 முதல் ஒவ்வொரு ஆண்டும் பத்து இலட்சம் வேலை வாய்ப்புகள் என்ற அளவில் 2025-26 வரை ஐம்பது இலட்சம் வேலை வாய்ப்புகளைத் தமிழக படித்த இளைஞர்களுக்கு வழங்கிட தீவிர முயற்சிகள் மேற்கொள்ளும். இந்த மாபெரும் திட்டத்தினைத் திறம்பட நிறைவேற்றிட மாநில திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்க அமைப்பு உருவாக்கப்படும்.

வேலை வாய்ப்பு அலுவலகங்கள் பயிற்சி மையங்களாக செயல்படும். இவ்வமைப்பின் மூலம் புகுமுகத் தொழில் முனைவோர் அமைப்புகள் உருவாக்கி, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, செயற்கை அறிவு உள்ளிட்ட துறைகளில் கூட்டு முயற்சியால் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

**கட்டாய திறன் வளர்ச்சி உரிமைச் சட்டம் **

186. இளம் வயதிலேயே பெற்றோரை இழந்து தனித்து விடப்பட்ட சிறுவர்,சிறுமியர், பெற்றோராலும், உற்றார் உறவினர்களாலும் வீட்டை விட்டுத் துரத்தப்பட்டு அன்றாட உணவுக்குக் கையேந்தி நிற்கும் திருநங்கையர், பள்ளிக்குச் செல்ல இயலாத மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் வேலை வாய்ப்புகளுக்குத் தகுதி ஏற்படுத்துவதற்கெனத் திறன் வளர்ச்சி உரிமைச் சட்டம் பயிற்சி நிறைவேற்றப்பட்டு அவர்கள் வேலைக்குச் செல்வதற்கோ, தொழில் தொடங்குவதற்கோ ஏற்ற வகையில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

**அரசுத் துறைகளில் 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள்**

187. தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்கள் நியமிக்கப்படுவர்.

188. தமிழகத்திலுள்ள நீர் நிலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், ஓடைகள் உள்ளிட்ட அனைத்து நீர் வளங்களையும் வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் பாதுகாக்கவும் கண்காணிக்கவும் அவை தொடர்பாக அரசின் சார்பாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு பெற்ற 75,000 இளைஞர்கள் பணி அமர்த்தப்படுவர். இவர்களில் 30 ஆயிரம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

189. தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகள் பாலங்கள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளைப் பாதுகாக்கும் பணிகளில் 75,000 சாலைப் பணியாளர்கள் கூசூசுனுஊ நியமிக்கப்படுவர். இவர்களில் 30 ஆயிரம் இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

**அறநிலையங்கள் பாதுகாப்பு 25000 பேருக்கு வேலை வாய்ப்பு**

190. தமிழகம் முழுவதும் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்கள், வழிபாட்டுத் தலங்களுக்குச் சொந்தமான சொத்துகளைக் கண்காணித்துப் பாதுகாக்கும் பணியில் 25 ஆயிரம் இளைஞர்கள் திருக்கோவில் பணியாளர்களாகப் பணியமர்த்தப்படுவர்.

191. மக்கள் நலப் பணியாளர்களாக 25 ஆயிரம் மகளிர் நியமிக்கப்படுவர். இவர்கள் அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அடிப்படை நிலையில் பணி அமர்த்தப்படுவர். இவர்கள், ஒவ்வொரு கிராமத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலர் கட்டுப்பாட்டில் செயல்படுவர்.

**தொழில் துறையை மீட்டெடுக்க ரூ. 15,000 கோடி நிதியுதவி**

192. கொரோனா தொற்றின் காரணமாகத் தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டுமென்ற அரசு உத்தரவு காரணமாகவும், போக்குவரத்து வசதிகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தாலும் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்க இயலாத நிலை ஏற்பட்டு வேலை இழப்பும், பொருளாதாரச் சரிவும் உண்டானது. தற்போது மாறிவரும் சூழ்நிலையில் தொற்றுக் காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைக்கவும், அங்கேயே பணியாற்றிய தொழிலாளர்கள் மீண்டும் வேலை பெறவும், இந்த நிறுவனங்களுக்கு எளிய தவணைகளில் திரும்பச் செலுத்தக் கூடிய வகையில் கடன் உதவி செய்வதற்கென்று 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தொழில் கொத்துகளை பரவலாக்குவோம்

193. தி.மு.க. முனைப்பாக மேற்கொண்ட தொழில் விரிவாக்கக் கொள்கைகளினால் தொழில் வளர்ச்சி புவியியல் ரீதியாகப் பரவியுள்ளபோதும் தொழில் வளர்ச்சி மேலும் பரவலாக்க உரிய கொள்கைகள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இதன் வாயிலாக ஆங்காங்கே வேளாண் அல்லாத தொழில் வாய்ப்புகள் பல்கிப் பெருகும்.

நிதிச் சிக்கலைச் சமாளிக்க சிறப்பு நிறுவனங்கள்

194. TIDCO, SIDCO, TIIC போன்ற முன்னோடி அமைப்புகள் உருவாக்கப்பட்டதுபோல் வங்கிகள் / நிதி நிறுவனங்களுடன் இணைந்து சிறு / குறு தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான நிதியுதவியினை ஏற்பாடு செய்ய இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுச் செயல்படும்.

195. தொழில்நுட்பம் புயலென மாறி வரும் சூழலில் தொழில் நிறுவனங்களுக்கும் தொழில்நுட்ப உயர்கல்வி அமைப்புகளுக்கும் ஒரு வலுவான பிணைப்பு தேவை. அத்தகைய பிணைப்பினால் தொழில் துறையும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் ஆகிய இரு தரப்பும் பயனுறும். இதனைப் புதிதாக அமையவுள்ள தி.மு.க அரசு முனைப்புடன் செயல்படுத்தும்.

196. தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவிகிதம் வேலைவாய்ப்புகளைத் தமிழர்களுக்கே வழங்கப்பட சட்டம் இயற்றப்படும்.

197. அ.தி.மு.க ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளால் செயல்பட முடியாமல் நலிவடைந்த – நலிவடைந்து கொண்டிருக்கிற ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களின் பிரச்சினைகளை உரிய முறையில் தீர்ப்பதற்கு வசதியாக அரசுத் துறைகள், நிதி நிறுவனங்கள், தொழில்துறை ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றைத் தி.மு.கழக ஆட்சி அமைந்தவுடன் உருவாக்கி; அக்குழுவின் பரிந்துரைகளைப் பெற்றுத் தொழில் நிறுவனங்களை நலிவிலிருந்து மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

198. அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்கத் தேவையான சிறப்பு மின் பாதைகள், அனைத்துத் தொழிற்பேட்டை மற்றும் தொழிற்சாலைகளுக்கான பகுதிகளில் அமைக்கப்படும்.

199. தமிழகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில் முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க முன்வந்தால் அவர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டு வந்தன. தற்போது அதிமுக ஆட்சியில் ஊழல் அதிகரித்து ஒற்றைச் சாளர முறையையே பயனற்ற ஒன்றாக மாற்றிவிட்டது. அதன் விளைவாக புதிய முதலீட்டாளர்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வரத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கழக ஆட்சி அமைந்தவுடன் தொழில் தொடங்க முன்வருவோரை ஊக்குவிக்கும் வகையில் ஒற்றைச் சாளர முறையை முழுமையாகப் பயன்படுத்தி தொழில் வளம் பெருக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

*

200. தமிழகத்தில் உள்ள பல்வேறு கனிமவளங்களைப் பாதுகாக்கவும், பெருக்கவும், பயன்பாட்டை முறைப்படுத்தவும், முறை கேடுகளால் கொள்ளை போவதைத் தடுக்கவும், அரசுக்கு உரிய வருவாயை ஈட்டவும், தனியாக ஒரு புதிய கனிம வளங்கள் மற்றும் சுரங்கங்கள் அமைச்சகம் உருவாக்கப்படும்.

201. கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்களில் பல காலமாகப் பணியாற்றி வந்துள்ள மக்கள், இன்று ரப்பர் தொழிற்சாலைகள் குறைந்துவிட்ட காரணத்தால் வருவாய் இன்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைப் போக்கிட கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை தொடங்கப்படும்.

202. முந்தைய தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது போல, முதற்கட்டமாக, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தேவைப்படுகின்ற பொருள்களைச் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளிலிருந்து கொள்முதல் செய்வதற்கு 15 சதவிகித ஒதுக்கீடும், ஒப்பந்தப் புள்ளி விலையில் 10 சதவிகித விலைச் சலுகையையும் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

203. தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட, மதுரை முதல் தூத்துக்குடி வரையிலான தொழில் வழித்தடத்தில் புதிய தொழில்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோலவே, ஏற்கனவே சென்னை – திருப்பெரும்புதூர் வரை தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடர்ச்சியாக அமைந்துள்ள தொழிற்பாதை ஓசூர் வரை நீட்டிக்கப்படும்.

204. புதிய தொழில் தொடங்க முதல் தலைமுறைப் பொறியியல் பட்டதாரிகளுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்.

205. தொழில் நகரங்களில் தேவையான புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் அமைத்துத் தரப்படும்.

206. குறுந்தொழில்கள் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு வேலையில்லாப் பட்டதாரி இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க முன்வருவார்களே ஆனால், ஆண்டுக்கு 25,000 பேருக்குக் குறைந்த வட்டியில் முதற்கட்டமாக 20 லட்சம் ரூபாய் கூஐஐஊ மூலம் கடன் வசதி செய்து தரப்படும்.

207. இந்திய வார்ப்பட நிறுவனம் (ஐனேயைn ஐளேவவைரவந டிக குடிரனேசநைள) கோவையில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

208. சேலத்தில் ஒருங்கிணைந்த உருக்காலை விரிவாக்கத் திட்டம் செயல்படுத்தப்படவும், அதன் பயன்பாடுகளை அதிகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

209. தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் குறைந்த அழுத்த மின் அளவு 150 H.Pயிலிருந்து 200 H.Pயாக உயர்த்தப்படும்.

210. நாடா இல்லாத விசைத்தறித் தொழிலுக்கு 20 H.Pக்கு மேல் 40 H.Pக்குள் மின் கட்டண விகிதம் IIIBயில் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதற்குப் பதிலாகக் குறைந்தபட்சக் கட்டணமாக, அதாவது, தனி விகிதப்படி விதி III A1 ல் வசூலிக்க ஆவன செய்யப்படும்.

211. திண்டுக்கல், வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் தோல் பொருள்கள் பூங்கா அமைக்கப்படும்.

212. கோழிப்பண்ணை அமைக்க நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநரிடம் அனுமதி பெறவேண்டும் என்ற நிலை மாற்றப்பட்டு, முன்பு இருந்தது போல ஊராட்சி ஒன்றிய அலுவலர்களிடம் அனுமதி பெற்றால் போதும் என்ற நிலை மீண்டும் கொண்டுவரப்படும்.

213. 10 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

214. உலகப் புகழ்பெற்ற கவரிங் நகை தயாரிப்பில் முக்கிய கேந்திரமாக இருக்கும் சிதம்பரத்தில் கவரிங் நகை உற்பத்திக்கான சிறப்புத் தொழிற்பேட்டை உடனடியாக அமைக்கப்படும்.

**ஆலைக்கழிவு சுத்திகரிப்புப் பொது வசதிகள்**

215. நிலம் மற்றும் நீர் மாசுபடுவதற்குக் காரணம் தொழில் மையங்களில் அமைந்துள்ள பெரிய மற்றும் சிறு, குறு ஆலைகளே. எனவே, ஆலைகளால் வெளியேற்றப்படும் மாசுக் கழிவுகளை முறையாக அகற்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட, திருப்பூர், ஈரோடு. கரூர், திண்டுக்கல், வேலூர், அருப்புக்கோட்டை போன்ற நகரப் பகுதிகளில் இயங்கும் சாய ஆலைகள், தோல் பதனிடும் ஆலைகள் போன்ற தொழிலகங்கள் வெளியேற்றும் கழிவுகளை சுத்திகரிக்க மத்திய நிதி உதவியுடன் அமைத்திடத் தேவையான ஊநுகூஞ எனப்படும் கழிவு அகற்றும் பொதுவான சுத்திகரிப்பு வசதிகளை ஏற்படுத்திட மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும்.

216. திருப்பூர், ஈரோடு, கோவை, உள்ளிட்ட தொழில் நகரங்களில் அமைக்கப்படும் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு சலுகைக் கட்டணம் வசூலிக்கப்படும்

**இளைஞர் நலன்**

217. 12- ஆம் வகுப்பு மற்றும் தொழிற்கல்வி அடிப்படையில் தகுதியானவர், வேலை வாய்ப்பற்ற 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் குறைந்தபட்சம் 15 பேர் அடங்கிய இளைஞர் சுய முன்னேற்றக் குழுக்கள்” உருவாக்கப்பட்டு, அந்தக் குழுவினர் தொடங்க முன்வரும் சிறு, குறு தொழில்களுக்குத் தேவையான முதலீட்டில், குழுக்கள் 10 விழுக்காடு தொகையைச் செலுத்தினால், அரசு 25 விழுக்காடு மானியமாகத் தந்து மீதித் தொகையினை வங்கிக் கடனாகப் பெற்றுத் தரும். இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரசு கொள்முதல் செய்யும்போது ஒப்பந்தப்புள்ளியில் பத்து விழுக்காடு சலுகை தரப்படும். இதன் மூலம் படித்த இளைஞர்கள் வேலை தேடுவோர் என்ற நிலையிலிருந்து தொழில் முனைவோராக மாறி அவர்கள் வேறு பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்ற நிலையினை எய்துவர்; அத்துடன், தமிழ்நாடு உற்பத்தித் துறையில் முன்னேற்றம் அடைந்து வேலை வாய்ப்பின்மை குறைந்து, இளைஞர்களின் பங்களிப்போடு நம்முடைய மாநிலப் பொருளாதாரம் மேம்படுவதற்கான ஒரு மைல் கல் திட்டமாகவும் இது அமையும். இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் இளைஞர்கள் பயன் பெறுவர்.

218. தமிழகத்திற்கே உரித்தான பட்டாசு, பூட்டு, பட்டு, மிக்ஸி, கிரைண்டர் போன்ற பல்வேறு சிறு குறு தொழில்கள் ஆண்டாண்டு காலமாக சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுவதுடன், தமிழகத்தின் பொருளாதாரத்திற்குப் பெருமளவில் வலுவூட்டுகிறது. எனவே, இது போன்ற தொழில்களைப் பாதுகாக்கவும் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தவும் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கும் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும். ஒவ்வொரு தொழிலுக்கும் பாதுகாப்பான தனித்தனி சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்படும்.

219. நாமக்கல்லில் குளிரூட்டப்பட்ட முட்டை சேமிப்புக் கிடங்கு வசதிகள் அமைத்து முட்டை உற்பத்தியாளர்கள் இழப்பிலிருந்து விடுபட வழி காணப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *