jமாதாந்திர மின் கட்டணம் : அமைச்சர் பதில்!

politics

மாதாந்திர மின் கட்டண கணக்கீடு திட்டம் விரைவில் நடைமுறைபடுத்தப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பொன்னையராஜபுரம் மாரண்ண கவுண்டர் ஆரம்பப் பள்ளியில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெறும் மக்கள் சபை கூட்டம் இன்று(அக்டோபர் 31) மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. அமைச்சர், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி,” முதல்வர் உத்தரவின்படி கோவை மாநகராட்சியில் 100 இடங்கள், நகராட்சி, பேரூராட்சிகள் 50 இடங்கள் என 150 இடங்களில் மக்களிடம் இருந்து அதிகாரிகள் மனுக்கள் பெறும் மக்கள் சபை கூட்டம் நேற்று தொடங்கப்பட்டது. முதல் நாளாக நேற்று நடந்த மக்கள் சபை கூட்டத்தில் வெறும் 6 வார்டுகளில் மட்டும் இருந்து 3,833 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இன்று நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவை முதியோர் உதவித்தொகை பெற்று தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் முதியோர் உதவித்தொகை விடுப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இங்கு, தங்கநகை செய்யக் கூடியவர்கள் மற்றும் நல சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

மாதாந்திர மின் கட்டணம் கணக்கீடு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “மின்சாரத் துறையில் உள்ள 56 ஆயிரம் காலியிடங்கள் உள்ளன. அதுபோன்று 50 சதவிகித மின் கணக்கீட்டாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. மாதாந்திர மின் கட்டணத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. ஏற்கனவே, மின்சார வாரியம் 1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடனில் உள்ளது. மாதாந்திர மின் கணக்கீடு என்பது தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்டது. தேர்தலில் கொடுக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில் ஆட்சி அமைந்த ஐந்து மாதங்களில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதுபோன்று, படிப்படியாக மாதாந்திர மின் கட்டண கணக்கீடு வாக்குறுதியும் முதல்வர் நிறைவேற்றுவார்.

வாக்களித்தவர்கள் சந்தோஷப்பட வேண்டும், வாக்கு அளிக்காதவர்கள் வருத்தப்பட வேண்டும், அந்தளவுக்கு ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற உறுதியை முதல்வர் அளித்துள்ளார். அதன்படி, 234 தொகுதிகளையும் தனது தொகுதிகளாக எண்ணி பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

கோவை மாவட்டத்தில் பல பணிகள் தொடங்கப்பட்டு, நிறைவுபெறாமல் இருக்கின்றன. அதில் பல்வேறு பணிகள் மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.இதையடுத்து, மாநகராட்சியின் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தப்பட்டு, மாநகராட்சிக்கு என்ன தேவை இருக்கிறதோ, அவை அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்று உறுதியளித்தார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *