gகை சின்னத்துக்கு ஓட்டு கேட்ட சிந்தியா

politics

கட்சி மாறிய பின்னரும் பழைய கட்சியின் ஞாபகத்தையும் சின்னத்தையும் பொது இடங்களில் தன்னை அறியாமல் சொல்லிவிடுவது அரசியல்வாதிகளுக்கு எல்லா இடத்திலும் சகஜம்தான் போல.

கடந்த மார்ச் மாதம் கொரோனா ஆரம்பித்த நேரத்தில், மத்திய பிரதேசத்தில் நடந்து வந்த முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்து, தன்னுடன் சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கொண்டு பாஜகவில் சேர்ந்தார் காங்கிரஸின் முக்கிய தலைவராக விளங்கிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா.

இதேபோல ராஜஸ்தானில் சிந்தியாவின் நண்பரான சச்சின் பைலட் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அழைத்துக் கொண்டு மாநிலம் மாநிலமாக சுற்றினார். ஆனால் சிந்தியாவின் பாணியில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. மீண்டும் காங்கிரஸுக்கே வந்துவிட்டார்.

இந்த நிலையில் சிந்தியாவால் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்குப் போன 22 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அந்தத் தொகுதிகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது.

இந்தத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருக்கும் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பாஜக வேட்பாளர் இமார்டி தேவிக்கு ஆதரவாக அக்டோபர் 31 ஆம் தேதி பிரசாரம் செய்தார். அப்போது வேட்பாளரை பக்கத்தில் வைத்துக் கொண்டு உணர்ச்சிகரமாக பேசிய சிந்தியா, “மக்களே… வாக்குச் சாவடிக்கு கைகளை மூடிக் கொண்டு செல்லுங்கள். நேராக உள்ளே சென்று கை சின்னத்தின் பட்டனை அழுத்திவிட்டு வந்துவிடுங்கள்” என்று கூற பாஜக வேட்பாளர் ஷாக் ஆகிவிட்டார். பிறகு சட்டென சுதாரித்துக்கொண்ட சிந்தியா, ‘தாமரை சின்னத்தின் பட்டனை அழுத்துங்கள்’ என்று கூறுகிறார்.

கை சின்னத்தின் பட்டனில் அழுத்துங்கள் என்று சிந்தியா வேகமாக பேசும் வீடியோவை சமூக தளங்களில் வைரல் ஆக்கி வரும் காங்கிரஸார், “சிந்தியாஜி… மத்திய பிரதேச மக்கள் நவம்பர் 3 ஆம் தேதி கை சின்னத்தை தாக்குவார்கள் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறார்கள் என்று பரப்பி வருகிறார்கள். தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன் சிந்தியாவே இப்படி பேசிவிட்டதால் காங்கிரஸார் சிந்தியாவின் பிரச்சாரத்தை க்ளைமேக்ஸ் பிரச்சார உத்தியாக தங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

**-வேந்தன்**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *