தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் : எங்கு குறைவு? எங்கு அதிகம்? – முழு விவரம்!

அரசியல் தமிழகம்

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்றது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என இன்று (ஏப்ரல் 20) மாலை 7.08 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவித்தது.

2014 தேர்தலில் 73.68 சதவிகித வாக்குகளும், 2019 மக்களவைத் தேர்தலில் 72.44 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருந்த நிலையில், 2024 தேர்தலில் 69.46  சதவிகித வாக்குகள்  பதிவாகியுள்ளன.

இது கடந்த இரண்டு தேர்தல்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிடுகையில் 2024ல் பதிவான வாக்குகள் குறைவாகும்.

கடந்த இரு தேர்தல்களிலும் 70 சதவிகிதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த முறை 70 சதவிகிதத்தைக் கூட தொடவில்லை.

தொகுதிகள் -2014 -2019 (%)

1.திருவள்ளூர் தனி -73.73 – 72.33
2.வடசென்னை- 63.95 – 64.26
3.தென் சென்னை-60.37 – 57.07
4.மத்திய சென்னை -61.49 – 58.98
5.ஸ்ரீபெரும்புதூர் -66.21 – 62.44
6.காஞ்சிபுரம் -75.91 – 75.31
7.அரக்கோணம் -77.80 – 78.65
8.வேலூர் -74.58 – 71.46
9.கிருஷ்ணகிரி -77.68 – 75.95
10.தர்மபுரி -81.14 – 82.41
11.திருவண்ணாமலை -78.80 -78.15
12.ஆரணி -80.00- 79.01
13.விழுப்புரம் தனி -76.84 – 78.66
14.கள்ளக்குறிச்சி – 78.26 – 78.81
15.சேலம் -76.73 – 77.91
16.நாமக்கல் -79.64 – 80.22
17.ஈரோடு -76.06 – 73.11
18.திருப்பூர் -76.22 – 73.21
19.நீலகிரி தனி-73.43 – 74.01
20.கோயம்புத்தூர் -68.17 – 63.86
21.பொள்ளாச்சி -73.11 – 71.15
22.திண்டுக்கல் -77.36 – 75.29
23.கரூர் -80.47 – 79.55
24.திருச்சி -71.11 – 69.50
25.பெரம்பலூர் – 80.02 – 79.26
26.கடலூர் – 78.69 – 76.49
27.சிதம்பரம் தனி- 79.61 – 77.98
28.மயிலாடுதுறை – 75.87 – 73.93
29.நாகப்பட்டினம் தனி – 77.64 – 76.93
30.தஞ்சாவூர் – 75.49 – 72.55
31.சிவகங்கை – 72.83 – 69.90
32.மதுரை – 67.88 – 66.09
33.தேனி – 75.02 – 75.27
34.விருதுநகர் – 75.02 – 72.49
35.ராமநாதபுரம் – 68.67 – 68.40
36.தூத்துக்குடி – 69.92 – 69.48
37.தென்காசி தனி – 73.60 – 71.43
38.திருநெல்வேலி – 67.68 – 67.22
39.கன்னியாகுமரி – 67.68 – 69.83

2024 வாக்கு சதவிகிதம் (%)

1.திருவள்ளூர்- 68.31
2.  வட சென்னை – 60.13
3 தென் சென்னை- 54.27
4 .மத்திய சென்னை – 53.91
5. ஸ்ரீபெரும்புதூர்- 60.21
6. காஞ்சிபுரம்- 71.55
7 .அரக்கோணம்- 74.08
8. வேலூர்- 73.42
9 கிருஷ்ணகிரி- 71.31
10 . தர்மபுரி – 81.48
11. திருவண்ணாமலை – 73.88
12. ஆரணி – 75.65
13 .விழுப்புரம் – 76.47
14, கள்ளக்குறிச்சி – 79.25
15.சேலம் -78.13
16.நாமக்கல்-78.16
17. ஈரோடு- 70.54
18. திருப்பூர் – 70.58
19.நீலகிரி- 70.93
20. கோயம்புத்தூர் – 64.81
21.பொள்ளாச்சி- 70.70
22. திண்டுக்கல்- 70.99
23. கரூர்- 78.61
24. திருச்சிராப்பள்ளி – 67.45
25. பெரம்பலூர் – 77.37
26. கடலூர் – 72.28
27. சிதம்பரம் – 75.32
28. மயிலாடுதுறை- 70.06
29. நாகப்பட்டினம் – 71.55
30. தஞ்சாவூர் – 68.18
31. சிவகங்கை – 63.94
32. மதுரை – 61.92
33. தேனி – 69.87
34. விருதுநகர் – 70.17
35. ராமநாதபுரம் – 68.18
36. தூத்துக்குடி – 59.96
37. தென்காசி – 67.55
38. திருநெல்வேலி – 64.10
39. கன்னியாகுமரி – 65.46

அதன்படி 2014 தேர்தலுடன் ஒப்பிடுகையில் 73.68 – 69.46= 4.22 சதவிகித வாக்குகள்  மொத்தமாக குறைந்துள்ளன.

2019 தேர்தலுடன் ஒப்பிடுகையில்  72.44 – 69.46 = 2.98  வாக்குகள் இந்த முறை குறைந்துள்ளன.

2024ல்  அதிகபட்சமாக  தருமபுரியில்  81.48 சதவிகித வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 வாக்குப்பதிவு குறைந்த தொகுதிகள் 

கடந்த 2019  தேர்தலுடன் ஒப்பிடுகையில்,

திருவள்ளூர் – 4.02, வடசென்னை -4.13, தென் சென்னை -2.80  மத்திய சென்னை-5.01, ஸ்ரீபெரும்புதூர் -2.23,  காஞ்சிபுரம் –  3.76, அரக்கோணம் -4.57, – கிருஷ்ணகிரி -4.01,  தர்மபுரி – 0.93, திருவண்ணாமலை – 4.27 ஆரணி -3.36, விழுப்புரம் – 2.19,நாமக்கல் -2.06,  ஈரோடு -2.57, திருப்பூர் -2.63, நீலகிரி -3.08, பொள்ளாச்சி – 0.75, திண்டுக்கல் -4.30, கரூர் -0.94,  திருச்சி -2.01, பெரம்பலூர் -1.92, கடலூர் -4.21,  சிதம்பரம் -2.66, மயிலாடுதுறை – 3.87,  நாகப்பட்டினம் -5.38,  தஞ்சாவூர் -4.37, சிவகங்கை-5.96, மதுரை -4.17,  தேனி – 5.40,  விருதுநகர்-2.32,  ராமநாதபுரம் -0.22,  தூத்துக்குடி – 9.52, தென்காசி -3.88, திருநெல்வேலி -3.12, கன்னியாகுமரி – 4.37   சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன.

இதில் தூத்துக்குடியில் ஏறத்தாழ 10 சதவிகிதம் அளவுக்கு வாக்குப்பதிவு குறைந்துள்ளது. மொத்தம் 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

அதிக வாக்குப்பதிவு

வேலூர் – 1.94, கள்ளக்குறிச்சி -0.44, சேலம் – 0.22, கோயமுத்தூர்- 0.95 சதவிகித வாக்குகள் கடந்த தேர்தலை விட அதிகரித்துள்ளன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

தடைகளை கடந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத்

தளபதிய விட தலவிதி முக்கியம் பிகிலே : அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *