Venkatachala petitioned on AV Raju

’ரூ.1 கோடி வேண்டும்’ : ஏ.வி.ராஜூக்கு எதிராக வெங்கடாச்சலம் மனு!

அரசியல்

தன்னை குறித்து அவதூறு கருத்த தெரிவித்த ஏ.வி.ராஜூ மானநஷ்ட ஈடாக ரூ. 1 கோடி வழங்க உத்தரவிட கோரி அதிமுக சேலம் மாவட்ட செயலாளர் வெங்காடச்சலம் உயர்நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 26) மனு அளித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ கூவத்தூர் விவகாரம் குறித்து பேசினார்.

அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி, அதிமுக சேலம் மாவட்ட செயலாளர் வெங்காடச்சலம், நடிகை த்ரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் ஆகியோர் குறித்து அவர் கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக நடிகை த்ரிஷா ட்வீட் செய்த நிலையில், அவரிடம் ஏவி.ராஜூ மன்னிப்பு கேட்டார்.

அதேவேளையில் தன்னை குறித்து அவதூறாக பேசியதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக சேலம் மாவட்ட செயலாளர் வெங்காடச்சலம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

ஆனால் அவரிடம் இதுவரை மன்னிப்பு கேட்காத ஏ.வி.ராஜூ, கட்சியிலிருந்து தன்னை நீக்கிய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.

இதனையடுத்து ஏ.வி.ராஜூ மானநஷ்ட ஈடாக ரூ. 1 கோடி வழங்க உத்தரவிட கோரி வெங்காடச்சலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், “தன்னை குறித்து அவதூறு கருத்த தெரிவித்த ஏ.வி.ராஜூ இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. அடிப்படை ஆதாரமில்லாத அவரது குற்றச்சாட்டால் பொதுவாழ்வில் இருந்து வரும் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே ஏ.வி.ராஜூ மானநஷ்ட ஈடாக ரூ. 1 கோடி வழங்க உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அண்ணாமலை மீதான வழக்கு : உச்சநீதிமன்றம் தடை!

இந்த மாவட்டங்களுக்கு மழை உண்டு : வானிலை மையம்

+1
0
+1
4
+1
0
+1
2
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *