திமுக ஆட்சி வந்தவுடன் தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக ஆர்.சண்முக சுந்தரம் நியமிக்கப்பட்டார்.
அமைச்சர்கள் மீதான வழக்குகளை உயர்நீதிமன்றத்தில் எப்படி எதிர்கொள்வது என்ற ஆலோசனை கடந்த வாரம் முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு தேதி அறிவித்தார்.
இந்தசூழலில், தற்போது அரசு தலைமை வழக்கறிஞர் பதவியை சண்முக சுந்தரம் ராஜினாமா செய்திருப்பதாக முதல்வர் தரப்பில் தகவல்கள் வருகின்றன,
அடுத்த தலைமை வழக்கறிஞர் விடுதலையா பி.எஸ்.ராமனா என்ற ஆலோசனையில் ராமனுக்கு அதிக வாய்ப்பிருப்பதாக மேல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…